நியோகோவ் என்ற புதிய வைரஸ் குறித்து பரவும் வதந்திகளை நம்ப வேண்டாம் என மருத்துவ நிபுணர்கள் வலியுறுத்தியுள்ளனர். நியோகோவ் குறித்து நீண்ட நெடிய ஆராய்ச்சி தேவை என உலக சுகாதார மையம் கூறியுள்ளது.
வளைகுடா நாடுகளில் 2012- ஆம் ஆண்டு `மெர்ஸ்' என்ற வைரஸ் நோய் பரவியது. மிடில் ஈஸ்ட் ரெஸ்பிரேட்டரி சிண்ட்ரோம் என்பதன் சுருக்கமே ‘மெர்ஸ்’. காய்ச்சல், இருமல், சுவாசக் கோளாறு என்று கொரோனா தாக்கத்தின் அறிகுறிகளை கொண்டது.
வவ்வாள்களிலிருந்து மனிதனுக்கு பரவி பாதிப்பை உண்டாக்கியதாக மருத்துவ நிபுணர்கள் கண்டறிந்தனர். மெர்ஸ் நோயை உண்டாக்கிய வைரசுக்கு வேகமாகத் தொற்றும் தன்மை இல்லை. அதனால் சில நாடுகளில் குறிப்பிட்ட சில இடங்களில் மட்டும் பரவி, காணாமல் போனது.
இதையும் படிங்க ... டாய்லெட்டுடன் சுற்றித்திரியும் வடகொரிய அதிபர்.. அதை யார் தொட்டாலும் சுட்டு விடுவாராம்!! - ரகசியம் என்ன?
எனினும் தொற்றாளர்களில் மூன்றில் ஒருவர் மரணமடைந்தார். நியோகோவ் மெர்ஸ்-கோவ் வைரஸைப் போன்ற உருமாற்றம் கொண்டதாக சீன விஞ்ஞானிகள் கருதுகிறார்கள். நியோகோவ் கொரோனா போல வேகமாகப் பரவும் என்றும் மெர்ஸ் வைரஸ் போல அதிக மரணத்தை ஏற்படுத்தும். என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
தற்போதைய நிலையில் தென் ஆப்பிரிக்காவில் வசிக்கும் வௌவால்கள் மத்தியில் இந்த நியோகோவ் வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ்கள் மனிதர்களுக்குப் பரவும் நேரத்தில், அதன் என்சைம்களில் சிலவகை மாற்றங்கள் ஏற்படுகின்றன. அப்படி ஒரு உருமாற்றம் இந்த நியோகோவ் வைரசில் ஏற்பட்டால், மட்டுமே ஆபத்து என்பதே விஞ்ஞானிகளின் கருத்தாக உள்ளது.
இதையும் படிங்க ... சீனாவிலிருந்து இன்னொரு கொரோனா வைரஸ் NeoCoV: இறப்பு விகிதம் 3-க்கு 1- பரவல் விகிதமும் அதிகம்-ஆய்வில் பகீர்
சீன அறிவியல் மையமும் வூஹான் பல்கலைக்கழகமும் இணைந்து நியோகோவ் வைரஸ் தொடர்பான ஆராய்ச்சியை மேற்கொண்டுள்ளன. இந்த வைரஸ் குறித்த நீண்ட நெடிய ஆராய்ச்சி தேவை என உலக சுகாதார மையம் கூறியுள்ளது. நியோகோவ் வைரஸ் குறித்து எச்சரித்த சீன விஞ்ஞானிகளுடன் தொடர்பில் இருப்பதாக, WHO- வின் ஒரு பிரிவான விலங்கு ஆரோக்கியத்திற்கான உலக அமைப்பு தெரிவித்துள்ளது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.