முகப்பு /செய்தி /உலகம் / ஆப்கானிஸ்தானில் மசூதியில் தாக்குதல்...47 பேர் உயிரிழப்பு: ஐ.எஸ். தீவிரவாதிகள் பொறுப்பேற்பு

ஆப்கானிஸ்தானில் மசூதியில் தாக்குதல்...47 பேர் உயிரிழப்பு: ஐ.எஸ். தீவிரவாதிகள் பொறுப்பேற்பு

மசூதியில் தாக்குதல்

மசூதியில் தாக்குதல்

ஷியா பிரிவு இஸ்லாமியர்களை குறிவைத்து நடத்தப்பட்ட இந்த தாக்குதலுக்கு கடும் கண்டனம் எழுந்துள்ளது. உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்றும் அஞ்சப்படுகிறது. 

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

ஆப்கானிஸ்தானின் கந்தஹார் நகரில் மசூதியில் நடந்த வெடிகுண்டு தாக்குதலில் 47பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த கொடூர தாக்குதலுக்கு ஐ.எஸ். தீவிரவாத இயக்கம் பொறுப்பேற்றுள்ளது.

கந்தஹார் நகரில் ஷியா பிரிவு இஸ்லாமியர்கள் வழிபாடு நடத்தும் பீபி ஃபாத்திமா மசூதியில் வெள்ளிக்கிழமை சிறப்புத் தொழுகை நடைபெற்றது. அப்போது வழிபட வந்தவர்களில் 4 பேர் தற்கொலைப்படையாக செயல்பட்டு வெடிகுண்டு தாக்குதல் நடத்தினர். இதில் 47  பேர் உடல் சிதறி உயிரிழந்துள்ளதாக முதல் கட்டத் தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த வாரம் வெள்ளிக்கிழமையும் குந்தூஸ் பகுதியில் தற்கொலைப்படை தாக்குதல் நடைபெற்றது. இதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.. கடந்த வார சம்பவத்துக்கு ஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றொரு பிரிவான ஐ.எஸ். கோரசான் அமைப்பு பொறுப்பேற்றது.

இந்நிலையில், புதிய தாக்குதலுக்கு ஐ.எஸ். அமைப்பு பொறுப்பு ஏற்றுள்ளது. வெடிகுண்டு தாக்குதல் நடந்த மசூதிக்கு தாலிபான் படைகள் விரைந்துள்ளன. ஷியா பிரிவு இஸ்லாமியர்களை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலுக்கு கடும் கண்டனம் எழுந்துள்ளது. உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்றும் அஞ்சப்படுகிறது.

மேலும் படிக்க: பட்டினி அதிகமுள்ள நாடுகள்.. பாகிஸ்தான், நேபாளத்தை விட பின்தங்கிய இந்தியா.. அதிர்ச்சி தகவல்

ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சி அமைந்ததை தொடர்ந்து ஐ.எஸ். தீவிரவாத குழுவின் தாக்குதலும் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: வங்கதேசத்தில் துர்கா பூஜை விழாவில் வன்முறை... 4 பேர் பலி: பின்னணியில் பாகிஸ்தான் தீவிரவாத குழு?

First published:

Tags: Afganistan, ISIS, Taliban