முகப்பு /செய்தி /உலகம் / பிரிட்டனில் காய்கறிகளுக்கு கடும் தட்டுப்பாடு.. ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேறியது காரணமா?

பிரிட்டனில் காய்கறிகளுக்கு கடும் தட்டுப்பாடு.. ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேறியது காரணமா?

காய்கறி தட்டுப்பாடு

காய்கறி தட்டுப்பாடு

ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் வெளியேறியதே  இந்த தட்டுப்பாட்டிற்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. 

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • interna, IndiaBritainBritain

பிரிட்டனில் காய்கறிகளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால்,  அந்நாட்டு மக்கள் பெரும் துன்பத்திற்கு ஆளாகியுள்ளனர். 

கீரை, தக்காளி, குடை மிளகாய்,, வெள்ளரிகாய், ப்ரோக்கோலி, காலிஃபிளவர் மற்றும் ராஸ்பெர்ரிகளுக்கு பிரிட்டனில் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் அங்குள்ள காய்கறி அங்காடிகள் விற்பனைக்கு கடும் கட்டுப்பாடு விதித்துள்ளன.   தக்காளி, குடை மிளகாய் உள்ளிட்ட பொருட்கள் ஒருவருக்கு ஒரு கிலோ மட்டுமே வழங்கப்படுகிறது.  பருவநிலை மாற்றம், எரிசக்தி விலையேற்றம், விநியோக சங்கிலியில் பிரச்னை ஆகியவை   தட்டுப்பாட்டுக்கு காரணமாக கூறப்படுகிறது.  ஆனால் ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் வெளியேறியதே  இந்த தட்டுப்பாட்டிற்கு முக்கிய  காரணமாக கூறப்படுகிறது.

பிரிட்டனில் குளிர்காலத்தில் 95 சதவிகித தக்காளி ஸ்பெயின் நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. ஆப்பிரிக்க நாடான மொரோக்காவும் பிரிட்டனின் முக்கிய இறக்குமதி  கேந்திரமாக உள்ளது. அங்கு ஏற்பட்ட புயல், ஒட்டு மொத்தமாக விளைச்சலை மட்டுப்படுத்தியது.  இதனால் பிரிட்டனில் காய்கறிகளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மேலும் இவ்விரு நாடுகளிலும் எரிசக்தி விலை கடுமையாக அதிகரித்துள்ளதால், குளிர்கால காய்கறிகளை பகுமை குடிலில் விவசாயிகள் விளைவிக்க வில்லை.

இதன் காரணமாகவும் பிரிட்டனில் விலையேற்றமும் தட்டுப்பாடும் நிலவுகிறது.  ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் வெளியேறிய பிறகு மற்ற நாடுகள், பிரிட்டனுடனான வர்த்தகத்தை குறைத்துக்கொண்டுள்ளன.  இதனால் பிரிட்டனுக்கான விநியோக சங்கிலி பெரிதும் தடைப்பட்டுள்ளது.  இந்த தட்டுப்பாடு மே மாதம் வரை நீடிக்கும் என நிபுணர்கள் கூறுகின்றனர். எரிசக்தி சார்ந்த தொழில்களுக்கான ஆதரவுத் திட்டத்தில் தோட்டக்கலைத் துறை சேர்க்கப்படாததால், இங்கிலாந்து விவசாயிகள் காய்கறி விவசாயத்தில் ஆர்வமாக ஈடுப்படுவதில்லை.  கடும் தட்டுப்பாட்டை தொடர்ந்து பிரிட்டன் மக்கள்,  இங்கிலாந்தில் அதிகம் விளையும் சிவுப்பு முள்ளங்கிக்கு மாற வேண்டும் என  அந்நாட்டு அரசு கேட்டுகொண்டுள்ளது.

First published:

Tags: BREXIT, Britain, Vegetable