தனது மனைவியுடன் பாலியல் உறவில் ஈடுபட்ட பின்னர் ஞாபக மறதி ஏற்பட்டதாக அயர்லாந்தை சேர்ந்த நபர் ஒருவர் கூறியுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக ஆய்வு கட்டுரை ஒன்றை அயர்லாந்தை சேர்ந்த மருத்துவ இதழ் வெளியிட்டுள்ளது.
அதில் கூறியதாவது, அயர்லாந்தை சேர்ந்த 66 வயது நபர் ஒருவர் தனது மனைவியுடன் பாலியல் உறவில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில், அவர் உடலுறவு கொண்ட 10 நிமிடம் கழித்து தனது செல்போனை எடுத்து பார்த்துள்ளார். செல்போனில் தேதியை பார்த்து அதிர்ச்சியும் வருத்தமும் அடைந்துள்ளார்.என்னவெற்று மனைவி கேட்ட நிலையில், நேற்று நமக்கு திருமண நாள் என்பதையே மறந்து போனேன். மறதி காரணமாக நமது திருமண நாளை கொண்டாட முடியாமல் போயிற்றே என வருந்தியுள்ளார்.
அந்த நபரின் பேச்சை கேட்டு மனைவியும் மகளும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். காரணம் முதல் நாள் மாலைதான் அவர்கள் குடும்பத்துடன் திருமண நாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடியுள்ளனர். ஆனால் அவை அனைத்தும் அந்த நபருக்கு முற்றிலும் ஞாபகத்தில் இல்லாமல் மறந்து போயுள்ளது.
உடனடியாக, இவர் மருத்துவமனைக்கு விரைந்து நரப்பியல் பரிசோதனை மேற்கொண்டார். அப்போது தான் இவருக்கு ட்ரான்சிட் க்ளோபல் அம்னீசியா(Transient Global Amnesia - TGA) எனப்படும் குறுகிய கால ஞாயபக மறதி நோய் ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இந்த அரியவகை நோய் 50 முதல் 70 வயதுக்கு உட்பட்டவர்கள் இடையே தான் பெரும்பாலும் காணப்படுகிறது. இந்த நபருக்கு ஏற்கனவே இதுபோன்ற சம்பவம் ஏற்பட்டுள்ளது. 2015ஆம் ஆண்டில் இதேபோல் மனைவியிடம் உடலுறவு கொண்ட சில நிமிடங்களில் குறுகிய கால ஞாயபக மறதி ஏற்பட்ட நிலையில், அது சில மணிநேரத்திலேய சரியாகியுள்ளது.
இதையும் படிங்க:
உலகின் மிக வயதான நாய் இது தான் - கின்னஸ் சாதனையில் இடம்பிடித்தது...
இந்த TGAவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பெயர், வயது, குடும்பம் போன்ற அடிப்படை விவரங்கள் ஏதும் மறப்பதில்லை என்பது சற்றே ஆறுதலான விஷயம் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.