புக்கர் பரிசை தட்டிச் சென்ற `மில்க்மேன்’

புக்கர் பரிசை தட்டிச் சென்ற `மில்க்மேன்’
’மில்க்மேன்’ நாவலை எழுதிய அன்னா பர்ன்ஸ்
  • News18
  • Last Updated: October 17, 2018, 10:33 PM IST
  • Share this:
`மில்க்மேன்’ (MILKMAN) என்ற நாவலுக்காக 2018-ம் ஆண்டுக்கான புக்கர் பரிசு அயர்லாந்தைச் சேர்ந்த அன்னா பர்ன்ஸ் என்ற பெண் நாவலாசிரியருக்கு வழங்கப்பட்டுள்ளது.

நடப்பாண்டு புக்கர் பரிசுக்கு அன்னா பர்ன்ஸ், ரிச்சர்ட் பவர்ஸ், டெய்ஸி ஜான்சன், எஸி எடுக்யன் ஆகிய எழுத்தாளர்கள் பரிந்துரைக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் கற்பனை படைப்புக்கான புக்கர் பரிசு வழங்கும் விழா லண்டனில் இன்று நடைபெற்றது.

அப்போது அன்னா பர்ன்ஸுக்கு இளவரசர் சார்லஸின் மனைவி கமிலா, புக்கர் பரிசையும் சுமார் 4.8 கோடி ரூபாய் பரிசுத்தொகையையும் வழங்கினார். இந்த விருதினை வென்றது தனக்கு பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளதாக அன்னா பர்ன்ஸ் தெரிவித்தார். வடக்கு அயர்லாந்தைச் சேர்ந்த எழுத்தாளர் ஒருவர் புக்கர் பரிசை வெல்வது இதுவே முதன்முறையாகும்.
First published: October 17, 2018
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading