• HOME
  • »
  • NEWS
  • »
  • international
  • »
  • ஹார்ட் அட்டாக்கில் இறந்தவருக்கு தூக்கு தண்டனை - ஈரானில் அதிர்ச்சி சம்பவம்!

ஹார்ட் அட்டாக்கில் இறந்தவருக்கு தூக்கு தண்டனை - ஈரானில் அதிர்ச்சி சம்பவம்!

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

ஒரு பெண் மாரடைப்பால் இறந்த பின்னரும் தான் செய்த குற்றத்திற்காக தூக்கிலிடப்பட்டுள்ள அதிர்ச்சிகர சம்பவம் ஈரானில் நடந்துள்ளது

  • News18
  • Last Updated :
  • Share this:
ஒரு பெண் மாரடைப்பால் இறந்த பின்னரும் தான் செய்த குற்றத்திற்காக தூக்கிலிடப்பட்டுள்ள அதிர்ச்சிகர சம்பவம் ஈரானில் நடந்துள்ளது.

Zahra Ismaili என்ற பெண், தனது கணவர் தன்னையும் தனது மகளையும் தவறாக நடத்தியதாககூறி கணவரை கொலை செய்ததற்காக குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். சஹ்ராவின் கணவர் ஒரு உளவுத்துறை அதிகாரி (Iranian intelligence official). உளவுத் துறை அதிகாரியை கொன்றதற்காக சஹ்ராவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. தூக்கில் போடப்படுவதற்காக தூக்கு மேடைக்கு சஹ்ரா அழைத்துவரப்பட்டார். அப்போது சஹ்ராவுக்கு முன்னால் 16 குற்றவாளிகள் தூக்கு தண்டனை நிறைவேற்ற வரிசையில் காத்துக் கிடந்தார்கள்.

அந்த 16 பேரையும் ஒவ்வொருவராக தூக்கில் போடப்படும் கொடூரமான காட்சியை சஹ்ரா பார்க்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தப்பட்டார். அந்த கொடூர நிகழ்வை தன்னால் பார்க்க முடியாது என்று சஹ்ரா பலமுறை கூறினார். இதை ஏற்க மறுத்த அதிகாரிகள் அவரை கட்டாயப்படுத்தியதால் , சாராவுக்கு திடீரென்று ஹார்ட் அட்டாக் ஏற்பட்டு அவர் தூக்கிலிடப்படுவதற்கு முன்பே இறந்துவிட்டார்.

கிசாஸின் (Qisas) ஷரியா சட்டத்தின் படி ('கண்ணுக்கு கண்') பழிவாங்கும் முறை ஈரானில் பின்பற்றப்படுகிறது. ஈரானை பொருத்தவரை ஒருவர் மற்றொருவரைக் கொலை செய்து விட்டாலோ அல்லது கொலை செய்வதற்கு தூண்டினாலோ இறந்தவருக்காக பழிக்கு பழி வாங்கும் நடவடிக்கையாக குற்றவாளி சட்டப்படி தூக்கில் போடப்படுவது வழக்கம்.

இந்நிலையில் தூக்குக் கயிற்றில் கட்டப்பட்ட நிலையில் குற்றவாளி நிற்கும் நாற்காலியை பாதிக்கப்பட்டவர் அல்லது உயிரிழந்தவரின் உறவினர்கள் யாராவது அந்த நாற்காலியை காலால் எட்டி உதைக்க வேண்டும், அவர்கள் அப்படி செய்தால் தான் இறந்தவர்களின் ஆத்மா சாந்தி அடையும் அதுமட்டுமல்லாது இறந்தவர்களின் உறவினர்களுக்கு நிம்மதி மற்றும் நீதி கிடைத்ததாக பொருள் என்பது அந்நாட்டின் சட்டமாக உள்ளது.

ஆனால் ஏற்கனவே மாரடைப்பால் இறந்து போன சஹ்ராவால் அவரது கணவரின் உறவினர்களுக்கு எந்த நீதியும் கிடைக்காது. இருந்தாலும் இறந்து போனவரின் உடலை தூக்கில் தொங்கவிட சஹ்ராவின் மாமியார் சஹ்ரா நிற்க வைக்கப்பட்டுள்ள நாற்காலியை காலால் எட்டி உதைக்க வேண்டுமென அங்குள்ள அதிகாரிகள் கூறியுள்ளனர்.

Also read... கார்ட்டூன் பெண் கதாப்பாத்திரங்களுக்கும் 'ஹிஜாப்' கட்டாயம் - ஈரான் அரசு உத்தரவு!

தெஹ்ரானுக்கு மேற்கே 20 மைல் தொலைவில் உள்ள கராஜ் நகரில் கடந்த புதன்கிழமை அன்று யாரும் நினைத்துக்கூட பார்த்திராத முறையில் ராஜாய் ஷா சிறைச்சாலையில் சஹ்ரா தூக்கிலிடப்பட்டார். மரண தண்டனையை நிறைவேற்றுவதில் இந்த இஸ்லாமிய குடியரசான ஈரான், சீனாவுக்கு அடுத்தபடியாக உள்ளது. ஒரு உயிரற்ற உடலுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டு நீதி நிலைநாட்டப்பட்டுள்ளதாக அங்குள்ளவர்கள் கூறிக்கொள்கின்றனர்.

ஐக்கிய நாடுகள் சபை கடந்த ஆண்டு 200க்கும் மேற்பட்ட மரண தண்டனைகளை அந்த நாட்டில் பதிவு செய்திருந்தது. அதில் குற்றமற்றவர்கள் அல்லது குற்றம் சாட்டப்பட்டு நிரூபிக்க முடியாமல் போனவர்களையும் ஈரான் சிறைத்துறை தூக்கிலிட்டுள்ளது. 2014ம் ஆண்டு ஒரு முன்னாள் உளவுத் துறை அதிகாரியை கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட 26 வயதான நபர் தூக்கிலிடப்பட்டார் அந்த சம்பவம் சர்வதேச நாடுகளின் கண்டனத்துக்கு ஆளானது. இஸ்லாம் நாடுகளில் இதுபோன்ற கடுமையான சட்டதிட்டங்கள் இருப்பதை நாம் கேள்விப்பட்டு இருப்போம். அதிலும் இதுபோன்ற சம்பவங்கள் உண்மையில் மிருகத்தனமாக உள்ளதுதான் பலரையும் கொந்தளிக்கவைத்துள்ளது.



உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: