சர்வதேச செஸ் போட்டியில் ஹிஜாப் அணியாமல் ஈரான் வீராங்கனை பங்கேற்று விளையாடியதற்கு அந்நாட்டு செஸ் கூட்டமைப்பு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது
ஈரானில் ஹிஜாப் சரியாக அணியாத இளம்பெண் மாஷா அமினி மீது காவல்துறையினர் தாக்கியதில் பரிதபமாக உயிரிழந்தார். இதனால் கொதித்தெழுந்த ஈரான் பெண்கள் ஹிஜாபுக்கு எதிராக மிகப்பெரிய போராட்டம் நடத்தி வருகின்றனர்,. மேலும் போராட்டம் நடத்தியவர்களையும் ஈரானிய படைகள் கண்மூடித்தனமாக தாக்கி வருகின்றனர். இதில் 200-க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளதாகவும் 15,000 அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியானது. கடந்த வாரத்தில் இரு இளைஞர்களை ஈரானிய அரசு பொது வெளியில் தூக்கிலிட்டது. இதற்கு கண்டனம் தெரிவித்து பொதுமக்கள் சாலையில் இறங்கியுள்ள நிலையில் அங்கு 21 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகினது. இப்படி ஈரானில் தொடர்ந்து பதட்டமான நிலை நீடித்துவருகிறது.
இந்த நிலையில் கஜகஸ்தானில் அல்மாட்டியில் நடைபெற்று வரும் சர்வதேச செஸ் போட்டியில் 25 வயதான ஈரான் வீராங்கனை சரசாதத் கதேமல்ஷாரி தலையில் ஹிஜாப் இல்லாமல் விளையாடினார். ஈரானில் நடைபெற்று வரும் ஹிஜாபுக்கு எதிராக நடைபெற்று வரும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் சரசாதத் கதேமல்ஷாரி இந்த முன்னெடுப்பில் ஈடுபட்டுள்ளார். மேலும் இந்த செயலுக்கு ஈரான் செஸ் கூட்டமைப்பு கடுமையான கண்டனங்களை தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் ஹிஜாப் இல்லாமல் விளையாடிய பிறகு ஈரான் வீராங்கனை சரசாதத் கதேமல்ஷாரி ஈரான் சென்றால் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என கருதி அவர் ஸ்பேயின் செல்லவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்திகள் வெளியாகியுள்ளன.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.