ஹோம் /நியூஸ் /உலகம் /

ஹிஜாப் அணியாமல் இன்ஸ்டாவில் போஸ்ட்... ஆஸ்கர் விருது பெற்ற படத்தின் நடிகை கைது

ஹிஜாப் அணியாமல் இன்ஸ்டாவில் போஸ்ட்... ஆஸ்கர் விருது பெற்ற படத்தின் நடிகை கைது

கைது செய்யப்பட்ட ஈரானிய நடிகை

கைது செய்யப்பட்ட ஈரானிய நடிகை

நடிகை தாரனே அலிதூஸ்தி நடித்து 2016இல் வெளியான The Salesman திரைப்படம் புகழ்பெற்ற ஆஸ்கர் விருதை வென்றது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • inter, IndiaTehranTehran

ஈரான் நாட்டில் ஆஸ்கர் விருது வென்ற திரைப்படத்தின் நடிகை தாரனே அலிதூஸ்தி (Taraneh Alidoosti) காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். ஹிஜாப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து அவர் காரணத்திற்காக அவர் மீது இந்த கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இஸ்லாமிய நாடான ஈரானில் இஸ்லாமிய சட்டங்கள் கடுமையாக பின்பற்றப்படுகிறது. அங்கு 9 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் கட்டாயம் ஹிஜாப் அணிவது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. மேலும், இது போன்ற சட்ட விதிமுறைகள் பின்பற்றவது கண்காணிப்பதற்கு என்று கலாசார காவல்படை (Morality Police) என்ற தனி காவல்பிரிவு உருவாக்கப்பட்டிருந்தது. இந்த காவல்படை பிரிவு, விதிமுறைகளை மீறும் நபர்களிடம் பார்த்த இடத்திலேயே கடும் தண்டனை வழங்கி அச்சுறுத்தலை அளித்து வந்தது.

இந்நிலையில், கடந்த செப்டம்பர் 16ஆம் தேதி ஹிஜாப் அணியாமல் காரில் பயணம் செய்த 22 வயதான மாஷா அமினி என்ற இளம்பெண் இந்த கலாசார காவல்துறையினரின் தாக்குதலில் உயிரிழந்தார். ஈரானில் இந்த சட்டத்திற்கு எதிராக பெண்கள், கல்லூரி மாணவர்கள், மனித உரிமை ஆர்வளர்கள் உள்ளிட்டோர் தொடர் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். இந்த போராட்டத்திற்கு அந்நாட்டின் பல முன்னணி பிரபலங்களும் ஆதரவு தெரிவித்தனர்.

அவ்வாறு இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தவர் பிரபல நடிகை தாரனே அலிதூஸ்தி. இவர் நடித்து 2016இல் வெளியான The Salesman திரைப்படம் புகழ்பெற்ற ஆஸ்கர் விருதை வென்றது. அரசுக்கு எதிரான போராட்டத்தின் போது ஈரானின் போராட்டக்காரர் மொஹ்சென் ஷெகரி என்பவரை அந்நாட்டு அரசு மரண தண்டனை விதித்து கொன்றது.

இதையும் படிங்க: வாலிபருக்கு முத்தம் கொடுத்த குற்றத்திற்காக 20 வயது பெண்ணுக்கு சிறை தண்டனை!

இதற்கு கடுமையான கண்டனத்தை தெரிவித்து நடிகை தாரனே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கடும் கண்டனத்துடன் கூடிய பதிவை வெளியிட்டிருந்தார். ஹிஜாப் அணியாமல் புகைப்படத்துடன் தாரனே வெளியிட்ட அந்த பதிவு வேகமாக வைரலாக பகிரப்பட்டது. இது அந்நாட்டு அரசை ஆத்திரப்படுத்திய நிலையில், நடிகை தாரனேவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை முடக்கியதோடு, அவரை கைது செய்துள்ளது. நாட்டில் தவறான கருத்துக்களை பகிர்ந்து குழப்பத்தை ஏற்படுத்துதல் போன்ற குற்றங்களுக்காக இவரை கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

First published:

Tags: Hijab, Iran, Oscar Awards