Home /News /international /

பதவியேற்பு நிகழ்ச்சியில் ஆளுநரை அறைந்த நபர்: வைரலாகும் வீடியோ!

பதவியேற்பு நிகழ்ச்சியில் ஆளுநரை அறைந்த நபர்: வைரலாகும் வீடியோ!

ஆளுநருக்கு அறை

ஆளுநருக்கு அறை

அபிதின் கோரம் பேசிகொண்டிருந்தபோது, மேடையில் ஏறிய நபர் ஒருவர் திடீரென ஆளுநரின் பின்னந்தலையில் அறைந்தார். தொடர்ந்து அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தள்ளிவிட முயன்றார். 

    ஈரானில் பதவியேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்த  ஆளுநரை நபர் ஒருவர்  அறைந்தது தொடர்பான வீடியோ வெளியாக அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    ஈரான் நாட்டின்  கிழக்கு அஜர்பைஜான் மாகாணத்தின் புதிய ஆளுநராக அபிதின் கோரம் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். இவரது பதவியேற்பு நிகழ்ச்சி  வடகிழக்கு நகரமான தப்ரிஸில் உள்ள இமாம் கொமேனி மசூதியில் நடைபெற்றது. அபிதின் கோரம் பேசிகொண்டிருந்தபோது, மேடையில் ஏறிய நபர் ஒருவர் திடீரென ஆளுநரின் பின்னந்தலையில் அறைந்தார்.

    தொடர்ந்து அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தள்ளிவிட முயன்றார்.  பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த அதிகாரிகள் உடனடியாக மேடைக்கு விரைந்து தாக்குதலில் ஈடுபட்ட நபரை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இந்த நிகழ்வால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    இந்நிகழ்ச்சியில் நாட்டின் உள்துறை அமைச்சர், அயதுல்லா கமேனியின் அலுவலக பிரதிநிதிகள் மற்றும் பிற மாநில அதிகாரிகள் கலந்து கொண்டனர். ஈரானில் ஏற்பட்ட அறியவகை பாதுகாப்பு மீறலாக இந்நிகழ்வு பார்க்கப்படுகிறது.  தாக்குதலில் ஈடுபட்ட நபரின் பெயர் அயுப் அலிசாதே  என தஸ்னிம் என்ற ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.

    தாக்குதலுக்கான காரணம் தெரியவில்லை. அறைந்த நபரை தனக்கு தனிப்பட்ட முறையில் தெரியாது என்று மாகாண ஆளுநரும் கூறியுள்ளார். இந்த தாக்குதல் தொடர்பான வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி  வேகமாக பரவி வருகிறது.

    இதையும் படிங்க: கட்டிபிடிப்பது, படுக்கையறை, காதல் ஜோடிகளின் நெருக்கமான காட்சிகளை டிவி சேனல்கள் ஒளிபரப்ப தடை!

    Published by:Murugesh M
    First published:

    Tags: Attack, Governor, Iran

    அடுத்த செய்தி