முகப்பு /செய்தி /உலகம் / ஈரானில் பற்றி எரியும் ஹிஜாப் விவகாரம் : தலைமுடியை வெட்டி பெண்கள் நூதன போராட்டம்!

ஈரானில் பற்றி எரியும் ஹிஜாப் விவகாரம் : தலைமுடியை வெட்டி பெண்கள் நூதன போராட்டம்!

ஈரான் ஹிஜாப் சட்டத்திற்கு எதிராக பெண்கள் போராட்டம்

ஈரான் ஹிஜாப் சட்டத்திற்கு எதிராக பெண்கள் போராட்டம்

காவல்துறை தாக்குதலில் 22 பெண் உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து ஈரானில் பெண்கள் ஹிஜாப் சட்டத்திற்கு எதிராக தலை முடியை வெட்டி, ஹிஜாப்பை எரித்து தீவிர போராட்டத்தில் குதித்துள்ளனர்.

  • News18 Tamil
  • 2-MIN READ
  • Last Updated :
  • inter, IndiaTehranTehranTehranTehranTehran

ஈரான் நாட்டில் ஹிஜாப் சட்டத்திற்கு எதிராக கிளர்ந்து பெண்கள் நடத்திய போராட்டத்தில் காவல்துறை நடவடிக்கையால் 31 பேர் உயிரிழந்துள்ளனர். ஈரான் நாட்டில் ஹிஜாப் முறையாக அணியாததாக கூறி, 22 வயது இளம் பெண் காவல்துறையினரால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த மரணத்திற்கு எதிராக நீதிகேட்டும் அரசின் அடக்குமுறை சட்டங்களுக்கு எதிராகவும் ஈரானில் பெண்கள் ஹிஜாப்பை எரித்து, தலைமுடிகளை வெட்டி போராட்டம் நடத்தத்தொடங்கியுள்ளனர். இதன் காணொலிகள் சமூக வலைத்தளங்களிலும் வைராலகிவருகிறது.

இஸ்லாமிய நாடான ஈரானில் இஸ்லாமிய சட்டங்கள் கடுமையாக பின்பற்றப்படுகின்றன. அதன்படி  9 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் கட்டாயம் ஹிஜாப் அணிவது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. அங்கு பெண்கள் இஸ்லாமிய சட்டங்கள் ஹிஜாப் அணிவது உள்ளிட்டவற்றை கண்காணிக்க நெறிமுறை பிரிவு என்று காவல்துறையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் 22 வயதான மாஷா அமினி என்ற இளம்பெண் மேற்கு ஈரான் பகுதியான குர்திஸ்தான் பகுதியில் இருந்து தலைநகரில் தெஹ்ரானுக்கு குடும்பத்துடன் சென்றுள்ளார். அப்போது அந்த பெண் முறையாக ஹிஜாப் அணியாமல் இருந்துள்ள நிலையில், நெறிமுறை காவல்துறையினர் அந்த பெண் வந்த வாகனத்தை தடுத்து சோதனை செய்துள்ளனர். அப்போது இளம்பெண் முறையாக ஹிஜாப் அணியாததாக கூறி, அவரை கைது செய்து அவரை தாக்கியதில் மாஷா அமினி பரிதாபமாக உயிரிழந்தார்.

அந்த சம்பவம் அங்கு அதிர்ச்சியையைும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. அங்கு பெண் உரிமை ஆர்வலர்கள் இந்த சம்பவத்தை கண்டித்து போராட்டங்களை மேற்கொண்டுள்ளனர். குர்திஸ்தான் அதை சுற்றியுள்ள பிராந்தியங்களில் பெண்கள் ஒன்றுதிரண்டு சர்வாதிகாரி சாகட்டும் என அந்நாட்டின் உச்சபட்ச தலைவர் அயதொல்லா அலி காமினிக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். சில பெண்கள் தங்கள் முகத்தில் இருந்து ஹிஜாப்பை கழற்றி எதிர்ப்பை தெரிவித்தனர்.

இதையும் படிங்க: 43 ஆண்டுகளில் 53 பெண்களை திருமணம் செய்த நபர்.. அதற்கு அவர் சொல்லும் காரணம் என்ன தெரியுமா..!

போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கண்ணீர்புகை குண்டுகளை வீசி  காவல்துறையினர் கலைத்தனர். இந்நிலையில், பல பெண்கள் தங்கள் எதிர்ப்பை உலக அரங்கிற்கு கொண்டு சேர்க்கும் விதமாக கேமரா முன்பு தங்கள் தலைமுடிகளை வெட்டியும், ஹிஜாப்பை எரித்தும் வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் பரப்பி வருகின்றன. இந்த காணொலிகள் தற்போது வைரலாகிவருகின்றன. இதை தடுக்க காவல்துறை போராட்டக்காரர்கள் மீது கடும் அடுக்குமுறையை செயல்படுத்துகிறது. அத்துடன் போராட்டம் குறித்த செய்திகள் பரவுவதை தடுக்க இணையதளம் வெகுவாக முடக்கப்பட்டுள்ளது. 30க்கும் மேற்பட்ட நகர்களில் பரவிய போராட்டத்தை கட்டுப்படுத்த காவல்துறை எடுத்த நடவடிக்கையில் பொதுமக்கள் 31 பேர் உயிரிழந்துள்ளனர்.

First published:

Tags: Hijab, Iran, Protest, Viral Video