ஹோம் /நியூஸ் /உலகம் /

’அமெரிக்காவின் தந்திரங்களுக்கு ஈரான் ஏமாறாது’- ஈரான் தலைவர் திட்டவட்டம்!

’அமெரிக்காவின் தந்திரங்களுக்கு ஈரான் ஏமாறாது’- ஈரான் தலைவர் திட்டவட்டம்!

ஈரான் தலைவர் காமெனெய்

ஈரான் தலைவர் காமெனெய்

போர் பதற்றத்தையும் தவிர்க்க ஈரான் உடன் அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்தத் தயார் என ஈரானுக்கு தூது அனுப்பப்பட்டு வந்தது.

  • News18
  • 1 minute read
  • Last Updated :

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அளிக்கும் சலுகைகளை நம்பி ஈரான் ஒருநாளும் ஏமாறாது என ஈரானின் மூத்த தலைவர் அயாதோலா அலி காமெனெய் தெரிவித்துள்ளார்.

ஈரான் உடனான தெஹ்ரான் அணுத்திட்ட ஒப்பந்தத்திலிருந்து விலகுவதாக அமெரிக்கா கடந்த ஆண்டு அறிவித்தது. அதோடு இல்லாமல் ஈரான் மீது பொருளாதரத் தடையையும் அமெரிக்க விதித்தது. அதிலிருந்து அமெரிக்கா- ஈரான் இடையேயான உறவில் பதற்ற நிலை நீடித்து வந்தது.

இந்த ஒப்பந்தத்திட்டம் முன்னாள் அதிபர் ஒபாமாவால் கையெழுத்திடப்பட்டது என்று பின் வாங்கினார் இன்றைய அதிபர் ட்ரம்ப். இதன் பின்னர் ஏற்பட்ட குழப்பத்தையும், போர் பதற்றத்தையும் தவிர்க்க ஈரான் உடன் அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்தத் தயார் என ஈரானுக்கு தூது அனுப்பப்பட்டு வந்தது.

ஆனால், மாறிமாறி பேசும் அமெரிக்கா மீது நம்பிக்கை இல்லை என ஈரான் அரசு திட்டவட்டமாக மறுத்துவிட்டது. தற்போது அமெரிக்கா குறித்து ஈரான் நாட்டு மூத்த தலைவர் காமெனெய் கூறுகையில், “இன்றைய ஈரான் தலைவர்களால் மட்டுமே ஈரான் தலைநிமிர்ந்து நிற்பதாக ட்ரம்ப் கூறுகிறார். இந்த அரசியல் தந்திரங்களுக்கு எல்லாம் ஈரானின் அதிகாரிகளும் ஈரான் நாடும் ஒருநாளும் ஏமாறாது” எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் பார்க்க: ’பொருளாதார ஒத்துழைப்பு தாருங்கள்..!’- ட்ரம்ப்புக்கு தெரேசா மே அழைப்பு!

Published by:Rahini M
First published:

Tags: America, Donald Trump, Iran