டெல்லி வன்முறை சம்பவத்தால் இந்தியா - ஈரான் இடையேயான உறவில் பிளவா?

டெல்லி வன்முறை சம்பவத்தால் இந்தியா - ஈரான் இடையேயான உறவில் பிளவா?
ஈரானிலுள்ள இந்திய தூதரங்கம் முன் போராட்டம்
  • Share this:
டெல்லி வன்முறை சர்வதேச கவனத்தைப் பெற்றுள்ள நிலையில், அது குறித்து ஈரானின் அதிஉயர் தலைவரான ஆயதுல்லாஹ் காமினி கருத்து தெரிவித்துள்ளார்.

அவரது ட்விட்டர் பதிவில் ”இந்திய முஸ்லிம்கள் படுகொலையால், உலகெங்கிலும் வாழும் முஸ்லிம்களின் மனங்கள் கவலையடைந்திருக்கின்றன” என்று கூறியுள்ள அவர், இந்திய அரசு ”இஸ்லாமிய உலகிலிருந்து தனிமைப்படாமல் இருக்க, தீவிரப்போக்குள்ள இந்துக்களையும் அவர்களின் கட்சிகளையும் முஸ்லிம் படுகொலைகளையும் முறியடிக்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

ஈரான் வெளியுறவு அமைச்சர் முஹம்மது ஜாவத் சரீஃப் கடந்த திங்கள்கிழமை அன்று, இந்திய முஸ்லிம்களுக்கெதிரான திட்டமிட்ட வன்முறையைக் கண்டிப்பதாகக் கருத்து தெரிவித்திருந்தார். அதற்கு மறுநாள் ஈரானில் உள்ள இந்தியத் தூதரகத்தின் முன் டெல்லி வன்முறையைக் கண்டித்து போராட்டம் நடத்தப்பட்டது.ஈரான் அமைச்சரின் கருத்துக்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்தது. தேவையற்ற கருத்து என்றும் ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் அதை விமர்சித்தது. இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரவீஷ்குமார், “ஈரானிடம் இருந்து இந்த மாதிரியான கருத்தை எதிர்பார்க்கவில்லை” என்று கூறியிருந்தார்.

அதைத் தொடர்ந்து ஆயதுல்லாஹ் காமினி கருத்து தெரிவித்திருக்கிறார். இதை பாகிஸ்தான் குடியரசுத் தலைவர் ஆரிஃப் அலவி வரவேற்றுள்ளார்.

இந்திய வெளியுறவுப் பணி அதிகாரியாக 29 ஆண்டுகாலம் பணிபுரிந்தவரான எம்.கே.பத்ரகுமார், ஆயதுல்லாஹ் காமினியின் கருத்தைத் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து, இந்த விஷயம் இருநாடுகளுக்கு இடையிலான கடும் விரிசலாக உருவாகியிருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

இந்த நிலைப்பாட்டுக்கு முரணாக, 1994ல் காஷ்மீர் விவகாரம் தொடர்பாக இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பு (OIC) ஐ.நாவில்  கொண்டுவந்த தீர்மானத்தை முறியடிக்க இந்தியாவுக்கு ஈரான் உதவியதாகவும் கூறியுள்ளார். எம்.கே.பத்ரகுமார் துருக்கி, உஸ்பெகிஸ்தான் போன்ற நாடுகளுக்குத் தூதுவராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Also see:

 
First published: March 6, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading