யாருக்கும் கீழ் அடிபணியப்போவதும் இல்லை - டிரம்ப் மிரட்டலுக்கு ஈரான் பதிலடி

‘அமெரிக்கா உடன் போரிட்டால் ஈரான் காணாமல் போகும்’ என்று வெளிப்படையாகவே எச்சரித்தார் ட்ரம்ப்.

Web Desk | news18
Updated: May 20, 2019, 3:21 PM IST
யாருக்கும் கீழ் அடிபணியப்போவதும் இல்லை - டிரம்ப் மிரட்டலுக்கு ஈரான் பதிலடி
மாதிரிப்படம்
Web Desk | news18
Updated: May 20, 2019, 3:21 PM IST
அமெரிக்கா உடன் போரிட விரும்பவில்லை என ஈரான் திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே கடந்த சில நாட்களாகவே போர் பதற்றம் அதிகரித்தே காணப்படுகிறது. சமீபத்தில் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் ஈரான் உடனான அணு ஒப்பந்தத்தை முறித்த பின்னர் ஈரான் மீது பொருளாதாரத் தடை விதித்தது.

சவுதி அரேபியாவில் எண்ணெய்க் கிணறுகள் வெடித்துத் தகர்க்கப்பட்ட பின்னர் ஈரான்- சவுதி அரேபியா இடையே பதற்றமான சூழல் காணப்பட்டது. சவுதிக்கு அமெரிக்கா உதவத் தயாராக உள்ள நிலையில், ‘அமெரிக்கா உடன் போரிட்டால் ஈரான் காணாமல் போகும்’ என்று வெளிப்படையாகவே எச்சரித்தார் ட்ரம்ப்.


கூடுதலாக, ஈரானுக்கு எதிரான அமெரிக்கப் படையும் சவுதியில் தயார் நிலையிலேயே வைக்கப்ப்ட்டுள்ளது. இந்த அரசியல் விளையாட்டில் தலையிடத் தயாராக இல்லை என்பது போல தற்போது ஈரான் தரப்பில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

ஈரானின் பாதுகாப்பு அதிகாரி ஈராந் அமெரிக்கப் போர் பதற்றம் குறித்து கூறுகையில், “ஈரான் ஒருநாளும் போரை விரும்பாது, ஆதரிக்காது. இதனால், யாருக்கும் கீழ் அடிபணியப்போவதும் இல்லை” என்று தெரிவித்தார்.

மேலும் பார்க்க: 2.5 லட்சம் ரோஹிங்யா அகதிகளுக்கு முதல் அடையாள அட்டை- ஐநா
First published: May 20, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...