ஹோம் /நியூஸ் /உலகம் /

ஈரானில் ஹிஜாப்புக்கு எதிரான ஊர்வலத்தில் துப்பாக்கிசூடு... 8 பேர் பலி

ஈரானில் ஹிஜாப்புக்கு எதிரான ஊர்வலத்தில் துப்பாக்கிசூடு... 8 பேர் பலி

மாதிரி படம்

மாதிரி படம்

மாஷா அமினி இறந்து 40 நாள் ஆனதையொட்டி அவரது சொந்த ஊரில் நடைபெற்ற மவுன ஊர்வலத்தில் துப்பாக்கிச்சூடு நடந்தது

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • internat, IndiaIranIranIran

  ஈராக்கில் ஹிஜாப் உடைக்கு எதிராக நடைபெற்ற அமைதி ஊர்வலத்தில்  ஏற்பட்ட துப்பாக்கிசூட்டில் 8 பேர் உயிரிழந்துள்ளதால் அங்கு மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  ஈரானில் கடந்த மாதம் 16-ம் தேதி ஹிஜாப்பை சரியாக அணியவில்லை என கூறி டெஹ்ரானில் போலீசாரால் கைது செய்யப்பட்ட 22 வயது இளம்பெண் மாஷா அமினி உயிரிழந்தார். இதனால் அந்த நாட்டில் ஹிஜாப்புக்கு எதிரான போராட்டம் வெடித்தது. இதில் பங்கேற்ற பெண்கள் ஹிஜாப் உடையைக் கிழித்தும், எரித்தும் போராட்டம் நடத்தினார்கள்.

  அப்போது போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே நடந்த மோதலில் பலர் கொல்லப்பட்டனர். மாஷா அமினி இறந்து 40 நாள் ஆனதையொட்டி அவரது சொந்த ஊரில் மவுன ஊர்வலம் நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு ஊர்வலமாக சென்று கொண்டிருந்தனர்.

  இதையும் படிங்க:ஆபாசப் படத்தில் சாத்தான் இருக்கு.. டெலிட் பண்ணுங்க'.. டிஜிட்டல் உலகம் குறித்து பேசிய போப் பிரான்சிஸ்!

  அப்போது பாதுகாப்புப் படை போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 8 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும்  இச்சம்பவத்துக்கு அந்நாட்டு மனித உரிமை துறை கடும் கண்டனம் தெரிவித்தது. ஹிஜாப் உடைக்கு எதிரான போராட்டமே அந்த நாட்டில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் ,அமைதி ஊர்வலத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 5க்கு மேற்பட்டோர் பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

  Published by:Arunkumar A
  First published:

  Tags: Hijab, Iran, Protest