ஹோம் /நியூஸ் /உலகம் /

ஈரானில் ஹிஜாப் சட்டத்திற்கு எதிராக தீவிரமடையும் போராட்டம்.. இதுவரை 185 பேர் உயிரிழப்பு

ஈரானில் ஹிஜாப் சட்டத்திற்கு எதிராக தீவிரமடையும் போராட்டம்.. இதுவரை 185 பேர் உயிரிழப்பு

ஈரானில் தீவிரமடையும் போராட்டம்

ஈரானில் தீவிரமடையும் போராட்டம்

ஈரானில் ஹிஜாப் சட்டத்திற்கு எதிரான பொதுமக்கள் போராட்டம் தீவிரமடையும் நிலையில் இதுவரை போராட்டத்தில் ஈடுபட்ட 185 பேர் உயிரிழந்துள்ளனர்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • inter, IndiaTehranTehran

  ஈரான் நாட்டில் ஹிஜாப் சட்டத்திற்கு எதிரான போராட்டம் தொடர்ந்து தீவிரமடைந்து வரும் நிலையில், போராட்டத்தில் பங்கேற்ற 16வயது பெண் காவல்துறை நடவடிக்கை காரணமாக கொல்லப்பட்டுள்ளார். 16 வயது நிக்கா என்ற மாணவி சில நாள்களுக்கு முன்னர் மாயமான நிலையில், தங்கள் மகள் காவல்துறை அடுக்குமுறை தாக்குதல் நடவடிக்கை காரணமாக உயிரிழந்ததாக அவரின் தாயார் நஸ்ரின் ஷாகர்மி பரப்பு புகார் தெரிவித்துள்ளார்.

  மாயமான தனது மகளை உயிரற்ற நிலையில் காவல்துறை தங்களிடம் ஒப்படைத்தாக குற்றஞ்சாாட்டிய தாய் நஸ்ரின், தனது மகளின் மரணம் இயற்கையானது என பொதுவெளியில் பொய் வாக்குமூலம் தர காவல்துறை மிரட்டியதாக புகாரில் தெரிவித்துள்ளார்.

  இஸ்லாமிய நாடான ஈரானில் இஸ்லாமிய சட்டங்கள் கடுமையாக பின்பற்றப்படுகிறது. அங்கு 9 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் கட்டாயம் ஹிஜாப் அணிவது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. அங்கு பெண்கள் இஸ்லாமிய சட்டங்கள் ஹிஜாப் அணிவது உள்ளிட்டவற்றை கண்காணிக்க நெறிமுறை பிரிவு என்று காவல்துறையில் உருவாக்கப்பட்டுள்ளது.

  இந்நிலையில், கடந்த செப்டம்பர் 16ஆம் தேதி ஹிஜாப் அணியாமல் காரில் பயணம் செய்த 22 வயதான மாஷா அமினி என்ற இளம்பெண் காவல்துறை தாக்கியதில் பரிதாபமாக உயிரிழந்தார். அதைத் தொடர்ந்து ஈரானில் இந்த சட்டத்திற்கு எதிராக பெண்கள், கல்லூரி மாணவர்கள், மனித உரிமையாளர்கள உள்ளிட்டோர் தொடர் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். இந்த போராட்டத்தை அரசு காவல்துறையை வைத்து கடுமையா அடக்கி ஒடுக்கி வருகிறது.

  இதையும் படிங்க: நைஜீரியாவில் படகு கவிழ்ந்து கோர விபத்து.. 76 பேர் பலியான சோகம்!

  காவல்துறை நடவடிக்கை காரணமாக இதுவரை 185 போராட்டக்காரர்கள் உயிரிழந்ததாகவும் அதில் 19 பேர் சிறார்கள் எனவும் அதிர்ச்சிக்குரிய தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும் அரசின் ஒடுக்குமுறையை எதிர்த்து ஈரான் மக்கள் குறிப்பாக கல்லூரி மாணவிகள் தங்கள் போராட்டத்தை தொடர்ந்து தீவிரமாக முன்னெடுத்து செல்கின்றனர்.

  Published by:Kannan V
  First published:

  Tags: Hijab, Iran, Protest