Home /News /international /

பழிக்குப் பழி: அமெரிக்க படை தளம் மீது ஏவுகணைகள் வீசி ஈரான் தாக்குதல்

பழிக்குப் பழி: அமெரிக்க படை தளம் மீது ஏவுகணைகள் வீசி ஈரான் தாக்குதல்

 ஈராக்கில் அமெரிக்கப் படைகள் தாக்குதல்

ஈராக்கில் அமெரிக்கப் படைகள் தாக்குதல்

ஈராக்கில் தனது ராணுவத்தை குவிக்கும் பணிகளை அமெரிக்கா தொடர்ந்து மேற்கொண்டு வருவது ஈரான் ராணுவத்தை மேலும் கோபம் கொள்ளச் செய்தது.

    ஈராக்கில் உள்ள அமெரிக்க படைகள் மீது ஈரான் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தி உள்ளதால் பதற்றமான சூழல் நிலவி உள்ளது.

    ஈராக் தலைநகர் பாக்தாத்திலுள்ள சர்வதேச விமானநிலையத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் அமெரிக்கப் படையினர் நடத்திய தாக்குதலில் ஈரான் நாட்டின் பாதுகாப்பு படையின் தளபதி காசிம் சுலைமானி கொல்லப்பட்டார். மேலும், உளவுப் பிரிவுத்தலைவர் உள்பட ஏழு பேர் கொல்லப்பட்டனர். இந்தச் சம்பவம் உலக அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

    சுலைமானியின் மரணத்திற்கு நிச்சயம் பழி தீர்க்கப்படும் என ஈரான் அரசு உறுதி பூண்டுள்ளது. மேலும் அமெரிக்க ராணுவத் தலைமையகமான பென்டகனை தீவிரவாத அமைப்பாக அறிவித்து ஈரான் நாடாளுமன்றத்தில் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.

    இந்த சூழலில் ஈராக்கில் தனது ராணுவத்தை குவிக்கும் பணிகளை அமெரிக்கா தொடர்ந்து மேற்கொண்டு வருவது ஈரான் ராணுவத்தை மேலும் கோபம் கொள்ளச் செய்தது. ஈராக்கில் இருந்து படைகளை திரும்பப்பெற அமெரிக்கா மறுத்த நிலையில், அல் அசாத் பகுதியில் இருந்த ப்டைதளத்தின் மீது ஈரான் ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளது.

    இது சுலைமானி மரணத்திற்கான பழிக்கு பழி வாங்கும் செயல் என ஈரான் தெரிவித்துள்ளது. இந்த தாக்குதலை அமெரிக்கா ராணுவ தலைமையகமான பெண்டகனும் உறுதி செய்துள்ளது. தங்கள் நாட்டு படைகளுக்கு எந்த சேதமும் ஏற்படவில்லை எனவும் அமெரிக்கா கூறியுள்ளது.
    Published by:Vijay R
    First published:

    Tags: US-Iran Tensions

    அடுத்த செய்தி