ஹிஜாப் அணியாத பெண்ணுக்கு வங்கி சேவையில் உதவிய ஈரானிய வங்கி மேலாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்று உள்ளூர் ஊடகங்கள் ஞாயிற்றுக்கிழமை செய்தி வெளியிட்டன.
முஸ்லீம் கொள்கையை தீவிரமாக கடைபிடிக்கும் ஈரான் 1979 புரட்சியின் பின்னர் அமெரிக்க ஆதரவு முடியாட்சியை தூக்கியெறிந்து இஸ்லாமிய குடியரசை நிறுவிய நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு ஹிஜாப் கட்டாயமாக்கப்பட்டது.
80 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வசிக்கும் நாட்டில் பெண்கள் தங்கள் தலை, கழுத்து மற்றும் முடியை மறைக்க வேண்டும் என்பதை அந்த நாட்டின் அறநெறி காவல்துறையால் செயல்படுத்தப்படும் சட்டம் இயற்றப்பட்டு நடைமுறையில் உள்ளது.
இந்த ஆண்டு ஜூலையில், தீவிர பழமைவாத கொள்கையை கொண்ட ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி "அனைத்து அரசு நிறுவனங்களும் தலை முக்காடு சட்டத்தை அமல்படுத்த" அணிதிரட்ட அழைப்பு விடுத்தார்.
இதையும் படிங்க: சைக்கிளை அடித்துத்தூக்கிய அதிவேக ட்ரக்.. கனடாவில் உயிரிழந்த இந்திய மாணவர்!
இதையடுத்து செப்டம்பர் 16 அன்று, 22 வயதான மஹ்சா அமினி, ஆடைக் கட்டுப்பாடு விதிகளை எதிர்த்து போராடிவிதிகளை மீறியதாகக் கூறி அறநெறிப் போலீஸ் கைது செய்தனர். காவலில் இருக்கும் பொது ஏற்பட்ட அவரது மரணம் நாடு தழுவிய ஆர்ப்பாட்டங்களைத் தூண்டியது. ஹிஜாப் அணியாமலும் முடியை வெட்டியும் பெண்கள் போராடாத் தொடங்கினர்.
தற்போதும் பெண்கள் பலர் ஹிஜாப் அணியாமல் இருப்பதை காண முடிகிறது. இந்நிலையில் “தலைநகர் தெஹ்ரானுக்கு அருகில் உள்ள கோம் மாகாணத்தில் உள்ள வங்கி மேலாளர், வியாழன் அன்று ஹிஜாப் அணியாத ஒரு பெண்ணுக்கு வங்கி சேவைகளை வழங்கியதற்காக கவர்னரின் உத்தரவின்படி அவரது பதவியில் இருந்து நீக்கப்பட்டார்" என்று துணைநிலை ஆளுநர் அஹ்மத் ஹாஜிசாதே கூறினார்.
ஈரானில், பெரும்பாலான வங்கிகள் அரசின் கட்டுப்பாட்டில் உள்ளன, மேலும் ஹிஜாப் சட்டத்தை அமல்படுத்துவது அத்தகைய நிறுவனங்களில் மேலாளர்களின் பொறுப்பு என்று ஹாஜிசாதே கூறினார். வெளியிடப்பட்ட பெண்ணின் வீடியோ "சமூக ஊடகங்களில் நிறைய எதிர்வினைகளை வெளிப்படுத்தியது" என்றும் குறிப்பிட்டார்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.