முகப்பு /செய்தி /உலகம் / ஹிஜாப் எதிர்ப்பு போராட்டகாரர்களுக்கு ஆதரவு குரல்.. ஈரான் கால்பந்து வீரர் கைது - மறைமுக எச்சரிக்கையா?

ஹிஜாப் எதிர்ப்பு போராட்டகாரர்களுக்கு ஆதரவு குரல்.. ஈரான் கால்பந்து வீரர் கைது - மறைமுக எச்சரிக்கையா?

ஈரான் கால்பந்து வீரர் வோரியா கஃபோரி

ஈரான் கால்பந்து வீரர் வோரியா கஃபோரி

இங்கிலாந்துக்கு எதிரான முதல் போட்டியின் போது ஈரான் வீரர்கள் அந்நாட்டின் தேசிய கீதத்தை பாட மறுத்து அரசுக்கு எதிரான தங்கள் நிலைப்பாட்டை பதிவு செய்தனர்.

  • Last Updated :
  • inter, IndiaTehranTehranTehran

ஈரான் நாட்டில் அரசுக்கு எதிராகவும் ஹிஜாப் சட்டத்திற்கு எதிரான போராட்டக்காரர்களுக்கு ஆதரவாகவும் குரல்கொடுத்த கால்பந்து வீரர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஈரான் நாட்டைச் சேர்ந்த சர்வதேச கால்பந்து வீரர் வோரியா கஃபோரி. இவர் ஈரானின் குர்திஷ் பிராந்தியத்தை சேர்ந்தவராவார். 2019ஆம் ஆண்டு வரை ஈரான் அணிக்காக சர்வதேச போட்டிகளில் விளையாடிய இவர், தற்போது கிளப் போட்டிகளில் விளையாடி வருகிறார்.

இந்நிலையில், ஈரானில் கடந்த சில மாதங்களாக அரசின் ஹிஜாப் சட்டத்திற்கு எதிராக பொதுமக்கள் தீவிர போராட்டம் நடத்தி வரும் நிலையில், இந்த போராட்டத்திற்கு ஆதரவாக கால்பந்து வீரர் வோரியா குரல் கொடுத்துள்ளார். அரசின் அடுக்குமுறை சட்டத்திற்கு எதிராகவும், போராட்டக்காரர்களுக்கு ஆதரவாகவும் தொடர்ந்து குரல் கொடுத்த வோரியாவை அந்நாட்டு அரசு கைது செய்துள்ளது. அரசுக்கு களங்கம் விளைவிக்கும் விதமான கருத்துக்களைத் தெரிவித்து, நாட்டுக்கு எதிரான போலி கருத்துருவாக்கத்தை செய்வதாக குற்றம் சாட்டி 35 வயதான வோரியா கைது செய்யப்பட்டுள்ளார்.

கத்தார் நாட்டில் உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் நடைபெறும் வேளையில் ஈரான் நாட்டில் சர்வதேச கால்பந்து போட்டியில் விளையாடிய வீரர் கைது செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஈரான் அணியும் இந்த உலகக் கோப்பை போட்டியில் விளையாடி வருகிறது. இங்கிலாந்துக்கு எதிரான முதல் போட்டியின் போது ஈரான் வீரர்கள் அந்நாட்டின் தேசிய கீதத்தை பாட மறுத்து அரசுக்கு எதிரான தங்கள் நிலைப்பாட்டை பதிவு செய்தனர்.

இதையும் படிங்க: காதலனின் தொலைப்பேசியை வேறு பெண் எடுத்ததால் ஆத்திரம்.. வீட்டை தீவைத்து கொளுத்திய காதலி

இந்நிலையில், அவர்களுக்கு எச்சரிக்கை தரும் விதமாகத்தான் வோரியாவை அந்நாட்டு அரசு கைது செய்துள்ளதாக கருத்து தெரிவிக்கப்படுகிறது. அந்நாட்டில் இதுவரை போராட்டத்தில் ஈடுபட்ட 650க்கும் மேற்பட்ட பொதுமக்கள் காவல்துறை அடக்குமுறையால் உயிரிழந்துள்ளனர். அதேபோல், 30,000க்கும் மேற்பட்ட போராட்டக்காரர்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

First published:

Tags: Football, Hijab, Iran