ஹோம் /நியூஸ் /உலகம் /

பற்றி எரியும் ஈரான்.. ஹிஜாபிற்கு எதிராக வலுக்கும் போராட்டம்.. இதுவரை 40 பேர் மரணம்

பற்றி எரியும் ஈரான்.. ஹிஜாபிற்கு எதிராக வலுக்கும் போராட்டம்.. இதுவரை 40 பேர் மரணம்

ஈரான் போராட்டம்

ஈரான் போராட்டம்

ஈரானில் ஹிஜாப்-க்கு எதிரான போராட்டங்களில் 40-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக அந்நாட்டு அரசு தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • intern, Indiairaniran

  22 வயதான குர்து இன பெண்ணான மாஷா அமினி, கடந்த 10 நாட்களுக்கு முன்பு, ஈரான் தலைநகர் தெஹ்ரான் சென்ற போது அந்நாட்டின் அறநெறி பிரிவு காவலர்களால் கைது செய்யப்பட்டார். பொது இடங்களில் பெண்கள் கடைபிடிக்க வேண்டிய ஆடைக் கட்டுப்பாடுகளை அமினி மீறியதாக குற்றம்சாட்டப்பட்டார். அவர் கைதுசெய்யப்பட்ட பின் அறநெறிப் பிரிவு போலீஸாரால் தாக்கப்பட்டதாகவும், இதனால் அவர் உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவத்தைத் தொடர்ந்து ஈரானில் பெண்கள் பெரும் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

  இப்போராட்டங்களுக்கு வலுசேர்க்கும் விதமாக, பெண்கள் தங்களது தலைமுடியை வெட்டியும் ஹிஜாப்களை எரித்தும் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

  பெண்களுக்கு ஆதரவாக ஆண்களும் வீதியில் இறங்கி போராட்டம் நடத்துகின்றனர். போராட்டத்தின்போது, ஹிஜாப் அணியாத பெண் ஒருவரை தாக்கிய நபரை மற்றவர்கள் சூழ்ந்துகொண்ட காட்சிகளும் வெளியாகின.

  மக்களின் தொடர் போராட்டம் காரணமாக, தெஹ்ரான் போர்க்களமாக மாறிவரும் நிலையில், போராட்டங்களை ஒடுக்க, அந்நாட்டு அரசு இணையதள சேவையை துண்டித்துள்ளது. ஹிஜாப்பை தடை செய்யக் கூடாது என்று கூறியும் சிலர் போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டங்களை ஒடுக்க ராணுவத்தை அரசு வரவழைத்துள்ளது. போராட்டத்தில் வெடித்த வன்முறை மற்றும் போலீசாரின் தாக்குதல்களால் 40 பேர் வரை கொல்லப்பட்டிருக்கலாம் என கூறப்பட்டுள்ளது.

  இந்நிலையில், பேட்டி எடுக்கும்போது ஹிஜாப் அணிய மறுத்ததால் தனியார் தொலைக்காட்சியின் சர்வதேச பத்திரிக்கையாளர் கிறிஸ்டியன் அமன்பூருடனான நேர்காணலை ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி ரத்து செய்தார்.

  இதையும் வாசிக்க: வீட்டுக் காவலில் வைக்கப்பட்டாரா சீனா அதிபர் ஜி ஜின்பிங் - உண்மை என்ன?

  சிஎன்என் தொலைக்காட்சியின் பிரபல சர்வதேச செய்தியாளராக இருப்பவர் கிறிஸ்டியன் அமன்பூர். இவர், ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் கலந்துகொள்ள வந்திருந்த ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசியை நேர்காணல் செய்வதாக இருந்தது. இதற்காக பல வாரங்களாக திட்டமிடப்பட்டது. இப்ராஹிம் ரைசி அமெரிக்காவில் கொடுக்கும் முதல் நேர்காணல் இது என்றும் தெரிவிக்கப்பட்டது.

  இந்த நிலையில், ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி தனது நேர்காணலை ரத்து செய்துவிட்டதாகவும், பேட்டி காணும் கிறிஸ்டியன் அமன்பூர் ஹிஜாப் அணிய மறுத்ததே இதற்குக் காரணம் என்றும் கூறப்படுகிறது.

  Published by:Siddharthan Ashokan
  First published:

  Tags: Hijab, Iran, Protest