பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இணையதள சேவைகள் துண்டிப்பு!

இந்திய விமானிகள் இருவர் பாகிஸ்தானில் சிறைபிடிக்கப்பட்டு இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இணையதள சேவைகள் துண்டிப்பு!
இணையதள இணைப்பு துண்டிப்பு
  • News18
  • Last Updated: February 27, 2019, 5:02 PM IST
  • Share this:
இந்தியா, பாகிஸ்தான் இடையில் போர் மூழும் பதற்றமான சூழல் நிலவுவதால் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இணையதள சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளது.

புல்வாமா தாக்குதலுக்குப் பதிலடி அளிக்கும் விதமாக இந்திய விமானப் படை செவ்வாய்க்கிழமை பாகிஸ்தானில் ஊடுருவி எல்லை ஓரம் இருந்த தீவிரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியது.

இதில் 300-க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டிருக்கலாம் என்று செய்திகள் வெளியானது. இந்தியாவின் நடவடிக்கைக்குக் கடும் எச்சரிக்கை தெரிவித்த பாகிஸ்தான் இன்று காலை இந்திய எல்லையில் ஊடுருவி தாக்குதல் நடத்த முயற்சி செய்தது.


அதனையடுத்து, இரு நாடுகளுக்கு இடையில் போர் நடைபெறுமோ என்று பதற்றமான சூழல் இருந்து வருகிறது, மறு பக்கம் பாகிஸ்தான் ராணுவத் தளபதி போர் நடத்த நாங்கள் விரும்பவில்லை. போர் நடத்தப்பட்டு அதில் யார் வெற்றி அடைந்தார்கள், தோல்வி அடைந்தார்கள் என்பதைவிட மனிதாபிமானமே முக்கியம் என்று செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியிருந்தார்.

இதற்கிடையில் இந்திய விமானிகள் இருவர் பாகிஸ்தானில் சிறைபிடிக்கப்பட்டு இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.

எனவே தேவை இல்லாமல் சமுக வலைத்தளங்களில் வதந்திகள் பரவாமல் தடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில்  பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் அந்நாடு இணையதள சேவைகளை முற்றிலுமாகத் துண்டித்துள்ளது.Live Updates: இந்தியா -  பாகிஸ்தான் எல்லையில் பதற்றம் - உடனுக்குடன் அப்டேட்களை தெரிந்து கொள்ள க்ளிக் செய்க

மேலும் பார்க்க:
First published: February 27, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading