• HOME
  • »
  • NEWS
  • »
  • international
  • »
  • 2 டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்ட வெளிநாட்டினர் அமெரிக்கா வர இன்று முதல் அனுமதி!

2 டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்ட வெளிநாட்டினர் அமெரிக்கா வர இன்று முதல் அனுமதி!

 2 டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்ட வெளிநாட்டினர் அமெரிக்கா வர இன்று முதல் அனுமதி!

2 டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்ட வெளிநாட்டினர் அமெரிக்கா வர இன்று முதல் அனுமதி!

2 டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்ட வெளிநாட்டினர் அமெரிக்கா வர இன்று முதல் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

  • Share this:
    உலகளவில் கொரோனா பாதிப்பு இன்னும் எந்தவொரு நாட்டிலும் முழுமையாகக் கட்டுக்குள் வரவில்லை. கொரோனா தொடர்ந்து உருமாறிக் கொண்டே இருப்பதால் அதைச் சமாளிப்பது என்பது உலக நாடுகளுக்கு மிகப் பெரிய சிக்கலை உருவாக்கியுள்ளது. 2019ம் ஆண்டு முதன்முதலாக, சீனாவில் தோன்றிய கொரோனா, அங்கிருந்து பிரிட்டன், இந்தியா என உலக நாடுகளுக்கு பரவியது.

    தொடர்ந்து, முதல் அலையில் ஏற்பட்ட கொரோனா வைரஸ் உருமாறி அடுத்தடுத்த கொரோனா அலைகளை உண்டாக்கியது. இப்படி கொரோனா தொடர்ந்து உருமாறிக் கொண்டே இருப்பதால் வைரஸ் பாதிப்பைச் சமாளிப்பது உலக நாடுகளுக்கு பெரும் சிக்கலாக உருவெடுத்துள்ளது. இதனால் பல்வேறு நாடுகளும் வெளிநாட்டில் இருந்து வருவோருக்கு கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. குறிப்பாக அமெரிக்காவில் 1.5 ஆண்டுகளுக்கு முன் வெளிநாட்டு விமானங்களுக்குத் தடை விதிக்கப்பட்டது. அந்த தடை தற்போதும் தொடர்ந்தது.

    இந்த தடையால், ஐரோப்பிய ஒன்றியம், இங்கிலாந்து, இந்தியா, சீனா, பிரேசில் உள்ளிட்ட பல நாட்டினர் அமெரிக்காவிற்கு செல்ல முடியாமல் அவதியடைந்தனர்.

    இந்நிலையில் நவம்பர் 8 முதல் இந்த தடைகள் விலக்கிக் கொள்ளப்படும் என்று அமெரிக்கா அறிவித்திருந்தது. இதன்படி 20 மாதங்களுக்குப் பிறகு இன்று முதல் இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள், 72 மணி நேரத்திற்கு முன்னதாக எடுக்கப்பட்ட கொரோனா நெகட்டிவ் சான்றிதழுடன் அமெரிக்காவிற்கு வரலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தடுப்பூசி போட்டுக்கொள்ளாத பயணிகள், அவர்கள் அமெரிக்க குடிமக்களாகவோ, நிரந்தர குடியுரிமை பெற்றவர்களாகவோ இருந்தால், ஏற்றுக்கொள்ளப்பட்ட தடுப்பூசியை போட்டுக்கொள்ளாத வெளிநாட்டினர் சிறிய குழுவினராக இருந்தால், அவர்கள் புறப்பட்ட ஒரு நாளுக்குள் கொரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

    தடுப்பூசி போட்டுக்கொள்ளாத சிறுவர், சிறுமியர் தாங்கள் பயணம் செய்கிற பெரியவர்களுடன் அதே நேரத்தில் சோதனை செய்து கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Esakki Raja
    First published: