இன்று சர்வதேச புலிகள் தினம் - உணவுச் சங்கிலியில் முக்கிய பங்கு வகிக்கும் உயிரினமான புலிகள்

International Tiger Day | வனம் பெருக புலிகள் வேண்டும்.நாம் வாழ வேண்டுமெனில் புலிகளும் வாழ வேண்டும் என்பதை அனைவருக்கும் எடுத்துரைக்கும் வகையில் புலிகள் தினத்தை கோலாகலமாக கொண்டாடுவோம்.

இன்று சர்வதேச புலிகள் தினம் - உணவுச் சங்கிலியில் முக்கிய பங்கு வகிக்கும் உயிரினமான புலிகள்
புலி
  • News18
  • Last Updated: July 29, 2019, 9:01 AM IST
  • Share this:
அழிந்து வரும் புலி இனத்தை பாதுகாக்கும் வகையில் ஆண்டுதோறும் ஜூலை 29-ம் தேதி சர்வதேச புலிகள் தினம் கொண்டாடப்படுகிறது. 

மெடுக்காக சுற்றித்திரியும் புலிகள்தான் பச்சை பசேல் என காட்சியளிக்கும் வனத்தின் முக்கிய ஆதாரமாக விளங்குகிறது. உணவு சங்கிலியில் முக்கிய பங்கு வகிக்கும்  புலிகளின் எச்சங்கள் தான் பூஞ்சை காளான்களை உருவாக்கி பல்லுயிர் பெருக்கத்திற்கு வழி வகுக்கின்றன.

இதனாலேயே புலிகள் கொடிக்கப்பல் உயிரினம் என அழைக்கப்படுகிறது. ஒரு கப்பல் பறந்து விரிந்த கடலில் வரும் போது அந்த கப்பல் குறித்து அறிந்து கொள்ள அதன் மீது பறக்கும் கொடியே முதல் ஆதாரமாக உள்ளது.


அது போல் ஒரு வனப்பகுதியில் உள்ள புலிகளின் எண்ணிக்கையே அந்த வனத்தின் வளம் குறித்து எடுத்துரைப்பதாக வன உயிரின ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

புலிகள்


வனத்தின் வளம் பெருக அடிப்படை ஆதாரமாக உள்ள இந்த புலிகளின் எண்ணிக்கை, இந்தியாவில் 2000-வது ஆண்டில் கடுமையாக சரிந்து 1700-ஆக இருந்தது. இதனை அடுத்து மத்திய, மாநில அரசுகள் சுதாரித்து, தேசிய விலங்கான புலிகளை காத்து அதன் எண்ணிக்கையை பெருக்க பல்வேறு முயற்சிகளை எடுத்தன.அதன் விளைவாக இந்தியாவில் உள்ள புலிகளின் எண்ணிக்கை2,226-ஆக உயர்ந்தது. இது உலக அளவில் உள்ள மொத்த புலிகளின் எண்ணிக்கையில் 70 சதவீதம் ஆகும்.

அரசு தரப்பில் பல்வேறு முயற்சிகள் எடுத்ததால் புலிகளின் எண்ணிக்கை தற்போது உயர்ந்த போதும், ஆங்காங்கே புலிகளை பொதுமக்கள் அடித்துக் கொன்றனர் என்பது உள்ளிட்ட செய்திகள் வந்த வண்ணம் இருக்கத்தான் செய்கிறது.

தற்போது, இந்தியாவில் எத்தனை புலிகள் உள்ளது என்ற பட்டியலை பிரதமர் மோடி இன்று வெளியிட உள்ளார்.

நாம் வாழ நீரும், சுத்தமான காற்றும் வேண்டும். இந்த இரண்டும் கிடைக்க வனம் வேண்டும். வனம் பெருக புலிகள் வேண்டும்.நாம் வாழ வேண்டுமெனில் புலிகளும் வாழ வேண்டும் என்பதை அனைவருக்கும் எடுத்துரைக்கும் வகையில் புலிகள் தினத்தை கோலாகலமாக கொண்டாடுவோம்.

மேலும் படிக்க... அத்திவரதரைக் காண அலை மோதும் கூட்டம்!

அரசியல், சினிமா, வைரல், செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: July 29, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்