Home /News /international /

சர்வதேச மனித ஒருமைப்பாடு தினம் 2021: இந்த நாளின் வரலாறு மற்றும் முக்கியத்துவம்

சர்வதேச மனித ஒருமைப்பாடு தினம் 2021: இந்த நாளின் வரலாறு மற்றும் முக்கியத்துவம்

சர்வதேச மனித ஒருமைப்பாடு தினம் 2021

சர்வதேச மனித ஒருமைப்பாடு தினம் 2021

வறுமை, நிலையான வளர்ச்சி மற்றும் ஒட்டுமொத்த நல்வாழ்வு மற்றும் உலக அமைதி ஆகியவற்றின் அடிப்படையில் உலகளாவிய சவால்களை எதிர்கொள்ள புதிய முயற்சிகளை வகுப்பதில் இந்த நாள் கவனம் செலுத்துகிறது.

ஐநா பொது சபையால் (UN General Assembly) அறிமுகப்படுத்தப்பட்ட சர்வதேச மனித ஒருமைப்பாடு தினம் (International Human Solidarity Day) ஆண்டு தோறும் டிசம்பர் 20-ஆம் தேதி (இன்று) கொண்டாடப்பட்டு வருகிறது. ஐக்கிய நாடுகள் சபையின் கூற்றுப்படி மனிதர்களிடம் உள்ள ஒற்றுமை உணர்வு அனைத்து மட்டங்களிலும் சமூக உறவுகளில் அமைதியை கொண்டு வரும். உலக மக்களிடையே, குறிப்பாக உலக அரங்கில் ஒற்றுமையின் முக்கியத்துவத்தை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவே ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 20 அன்று சர்வதேச மனித ஒருமைப்பாடு தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது.

‘வேற்றுமையில் ஒற்றுமை’ என்பதை போற்றுகிறது ஐக்கிய நாடுகளின் இந்த சர்வதேச மனித ஒருமைப்பாடு தினம். சர்வதேச உடன்படிக்கைகளின் படி உலக நாடுகள் நடக்க வேண்டும் என்பதை இந்நாள் நினைவூட்டுகிறது. வறுமை மற்றும் பிற உலகளாவிய பிரச்சனைகளை ஒழிப்பதை நோக்கமாக கொண்ட புதிய முயற்சிகள் மற்றும் திட்டங்களை ஊக்குவிக்கிறது.

உலகளாவிய ஒற்றுமையை போற்றும் இந்நாளின் போது இதன் கருப்பொருள், வரலாறு மற்றும் முக்கியத்துவம் ஆகியவற்றை பற்றி மேலும் அறிந்து கொள்வோம்..

சர்வதேச மனித ஒருமைப்பாடு தினத்தின் நோக்கம்:

வறுமை ஒழிப்பு உள்ளிட்ட நிலையான வளர்ச்சி இலக்குகளை அடைவதற்கு அடிப்படையாக இருக்கும் ஒற்றுமையை மக்கள் மற்றும் நாடுகளிடையே ஊக்குவிப்பதே இந்த நாளின் முக்கிய நோக்கமாகும். இந்த நாள் உலகெங்கிலும் உள்ள மக்களின் பொருளாதார, சமூக மற்றும் கலாச்சார ஒற்றுமையை மேலும் அதிகரிக்கும் நோக்கில் முன்னெடுக்கப்படுகிறது.

ALSO READ |  ஆதார் எண்ணை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைக்கும் மசோதா இன்று தாக்கல்

சர்வதேச மனித ஒற்றுமை தினத்தின் வரலாறு:

உலகில் வாழும் ஒவ்வொரு குடிமகனும் மனித ஒற்றுமையின் முக்கியத்துவத்தை அறிந்திருக்க வேண்டும் என்ற அடிப்படையில் இந்த சர்வதேச மனித ஒற்றுமை நாள் உருவாக்கப்பட்டது. கடந்த 2005-ஆம் ஆண்டு டிசம்பர் 22-ல் மனித உறவுகளின் மிக முக்கியமான தூண்களில் ஒன்றாகவும், உலக மக்களுக்கும் - நாடுகளுக்கும் இடையிலான உறவுகளைத் தீர்மானிக்கும் அடிப்படை மற்றும் உலகளாவிய மதிப்புகளில் ஒன்றாகவும் "ஒற்றுமை" இருப்பதாக அறிவித்தது ஐநா பொது சபை.

இதனை தொடர்ந்து உலகில் உள்ள பல கலாச்சாரங்களில் சமத்துவம் மற்றும் சமூக நீதியை உறுதி செய்வதில் ஒற்றுமையின் முக்கியத்துவத்தை மக்கள் மற்றும் நாடுகளுக்கு வலியுறுத்த டிசம்பர் 20-ம் தேதியை சர்வதேச மனித ஒற்றுமை தினமாக அறிவித்தது UNGA. டிசம்பர் 20, 2002 அன்று UN பொது சபையால் உலகளாவிய வறுமையை போக்க World Solidarity Fund அறிமுகப்படுத்தப்பட்டது. இது பிப்ரவரி 2003-ல் ஐநா வளர்ச்சித் திட்டத்தின் அறக்கட்டளை நிதியின் (Trust Fund of the UN’s Development Program) ஒரு பகுதியாக மாறியது.

ALSO READ |  பூண்டு பயிரிட இரண்டரை லட்சம் செலவு செய்து பாதி விலை கூட கிடைக்கவில்லை- விவசாயி என்ன செய்தார் தெரியுமா?

கருப்பொருள்:

சர்வதேச மனித ஒருமைப்பாடு நாளின் கருப்பொருள் கலாச்சார சமத்துவம், மனித மற்றும் சமூக மேம்பாட்டை (குறிப்பாக வளரும் நாடுகளில்) சமூக நீதியை மேம்படுத்துவதை மையமாக கொண்டது. ஒவ்வொரு ஆண்டும் கருப்பொருள் ஒரே மாதிரியாக இருக்கும்.

முக்கியத்துவம்:

வறுமை, நிலையான வளர்ச்சி மற்றும் ஒட்டுமொத்த நல்வாழ்வு மற்றும் உலக அமைதி ஆகியவற்றின் அடிப்படையில் உலகளாவிய சவால்களை எதிர்கொள்ள புதிய முயற்சிகளை வகுப்பதில் இந்த நாள் கவனம் செலுத்துகிறது. மனித ஒற்றுமை மற்றும் சகிப்புத்தன்மையை மேம்படுத்துதல் என்ற தலைப்பில் விவாதங்கள் மற்றும் நிகழ்வுகள் நடத்தப்படுகிறது.
Published by:Sankaravadivoo G
First published:

Tags: UN, United Nation

அடுத்த செய்தி