• HOME
  • »
  • NEWS
  • »
  • international
  • »
  • சர்வதேச சகிப்புத்தன்மை தினம் 2021: வரலாறு மற்றும் முக்கியத்துவம்!

சர்வதேச சகிப்புத்தன்மை தினம் 2021: வரலாறு மற்றும் முக்கியத்துவம்!

சர்வதேச சகிப்புத்தன்மை தினம் 2021

சர்வதேச சகிப்புத்தன்மை தினம் 2021

International Day for Tolerance 2021 : சகிப்புத்தன்மைக்கான சர்வதேச தினம் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 16-ம் தேதி (இன்று) அனுசரிக்கப்பட்டு வருகிறது.இந்த நாளை கொண்டாடுவதன் நோக்கம் கலாச்சாரங்கள் மற்றும் மக்களிடையே சகிப்புத்தன்மையை வளர்ப்பதாகும்.

  • Share this:
சகிப்புத்தன்மைக்கான சர்வதேச தினம் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 16-ம் தேதி (இன்று) அனுசரிக்கப்பட்டு வருகிறது. சகிப்புத்தன்மை இல்லாமல் இருப்பதன் ஆபத்துகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த யுனெஸ்கோவால் பிரகடனப்படுத்தப்பட்ட நாள் தான் உலக சகிப்புத்தன்மை தினம் (International Day for Tolerance) ஆகும்.

இந்த நாளை கொண்டாடுவதன் நோக்கம் கலாச்சாரங்கள் மற்றும் மக்களிடையே சகிப்புத்தன்மையை வளர்ப்பதாகும். சமூகத்தின் ஒரு அங்கமே சகிப்புத்தன்மை என்ற கருத்தை மக்களிடையே கொண்டு சேர்க்கவும் இந்த நாள் உதவுகிறது.

கருப்பொருள், முக்கியத்துவம் மற்றும் வரலாறு..

இந்த தினத்தில் சகிப்புத்தன்மை இல்லாததால் ஏற்படும் எதிர்மற விளைவுகளை பற்றியும், நாம் வாழும் இந்த சமூகத்தில் சகிப்புத்தன்மை தேவைப்படுவதற்கான அவசியம் பற்றி வலியுறுத்தவும் பல்வேறு விழிப்புணர்வு பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. யுனெஸ்கோவின் 1995-ஆம் ஆண்டு சகிப்புத்தன்மை குறித்த கொள்கைகளின் பிரகடனத்தின்படி, "சகிப்புத்தன்மை என்பது நமது உலக கலாச்சாரங்களின் வளமான பன்முகத்தன்மை, நமது வெளிப்பாட்டின் வடிவங்கள் மற்றும் மனிதனாக இருப்பதற்கான வழிகளை மதிப்பது, ஏற்றுக்கொள்வது மற்றும் பாராட்டுவது" ஆகும்.



இதுவே 2021 சர்வதேச சகிப்புத்தன்மை தினத்தின் அடிப்படை கருப்பொருளாகும். பிறரின் உரிமை மற்றும் சுதந்திரத்தை மதிக்கும் பழக்கத்தை ஊக்குவிப்பது மற்றும் சகிப்புத்தன்மையின் அவசியம் பற்றி மக்களுக்கு எடுத்துரைப்பதும் இந்த நாள் அனுசரிக்கப்படுவதின் நோக்கம்.

ALSO READ |  உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தது திருமலை திருப்பதி தேவஸ்தானம்...

1995-ஆம் ஆண்டை ஐக்கிய நாடுகள் சபை சகிப்புத்தன்மைக்கான ஆண்டாக அறிவித்தது. சகிப்புத்தன்மை குறித்த கொள்கைகளின் பிரகடனம் யுனெஸ்கோவினால் அதே ஆண்டு நவம்பர் 16-ல் உருவாக்கப்பட்டது. மேலும் 1995-ஆம் ஆண்டு சர்வதேச சகிப்புத்தன்மை தினத்தை நினைவுகூருவதன் மூலம் அந்த ஆண்டு மகாத்மா காந்தியின் 125-வது பிறந்தநாளுக்கு அஞ்சலி செலுத்தவும் ஐ.நா முடிவு செய்தது. ஐநா-வின் நல்லெண்ண தூதராக இருந்த மதன்ஜீத் சிங் அந்த ஆண்டு கொண்டாட்டங்களுக்கு நிதியுதவி செய்தார்.



மேலும் சகிப்புத்தன்மையைக் கடைப்பிடிப்பதில் தனது வாழ்நாள் முழுவதும் அர்ப்பணிப்புடன் மத நல்லிணக்கம் மற்றும் அமைதியைக் கொண்டுவர பெரும் பங்களிப்பை வழங்கினார் மதன்ஜீத். 1996-ஆம் ஆண்டில், ஐ.நா பொதுச் சபை 51/95 தீர்மானத்தின் மூலம் நவம்பர் 16 அன்று சகிப்புத்தன்மைக்கான சர்வதேச தினத்தை அனுசரிக்க உறுப்பு நாடுகளுக்கு அழைப்பு விடுத்தது. சகிப்புத்தன்மை மற்றும் அகிம்சைக்கு தகுதியான நிறுவனங்கள் அல்லது நபர்களுக்கு 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை சர்வதேச சகிப்புத்தன்மை தின பரிசு வழங்கப்படுகிறது.



நவம்பர் 16 சர்வதேச சகிப்புத்தன்மை தினமான இன்று, பல வகை மனித நடத்தைகள், பல நாடுகளின் கலாச்சாரங்கள் மற்றும் அடிப்படை சுதந்திரம் ஆகியவை இந்த உலகத்தை மிகவும் அழகாக மாற்றுகின்றன என்பதை புரிந்து கொள்ள வேண்டும். தற்போதைய காலகட்டத்தில் உலக சமூகங்களில் அதிகரித்து வரும் வன்முறைகள், சகிப்புத்தன்மையின் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது. எனவே சகிப்புத்தன்மை தார்மீகக் கடமையாக மட்டுமல்லாமல் இன்றைய காலகட்டத்தின் தேவையாகவும் இருக்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Sankaravadivoo G
First published: