முகப்பு /செய்தி /உலகம் / வங்கப் போர் 1971 : 50 ஆண்டுகளுக்கு பிறகு போர்க்குற்றவாளிகள் 6 பேருக்கு மரண தண்டனை

வங்கப் போர் 1971 : 50 ஆண்டுகளுக்கு பிறகு போர்க்குற்றவாளிகள் 6 பேருக்கு மரண தண்டனை

வங்கதேச போர் குற்றவாளிகளுக்கு  மரண தண்டனை

வங்கதேச போர் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை

வங்கதேச மக்களுக்கு எதிராக போர்க்குற்றத்தில் ஈடுபட்ட ரசாகார் பாஹினி என்ற அமைப்பைச் சேர்ந்த ஆறு பேருக்கு இந்த மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

1971ஆம் ஆண்டு வங்கதேச நாட்டின் விடுதலை போரில் நடைபெற்ற போர் குற்றம் தொடர்பான விசாரணை அந்நாட்டின் சர்வதேச குற்ற தீர்ப்பாயத்தில் நடைபெற்று வருகிறது. இதன் முக்கிய வழக்கு ஒன்றில் ஆறு பேருக்கு மரண தண்டனை வழங்கி குற்ற தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

1947ஆம் ஆண்டு இந்தியா விடுதலை அடைந்த போது இந்தியாவில் இருந்து பிரிந்து பாகிஸ்தான் தனி நாடாக உருவெடுத்தது. அப்போது மேற்கு வங்க மாநிலத்தில் அண்டை பகுதியில் இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் பிராந்தியம் பாகிஸ்தான் நாட்டுடன் இணைந்து கிழக்கு பாகிஸ்தான் என அழைக்கப்பட்டு வந்தது. அங்கு வாழ்பவர்கள் இஸ்லாமியர்களாக இருந்தாலும் மொழி வாரியாக வங்க மொழி பேசுபவர்களாகவே இருந்தார்கள். பாகிஸ்தான் நாட்டின் குடிமக்களாகவே இருந்தாலும், கிழக்கு பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் மொழி வழி சிறுபான்மையினராக இருந்து பாகிஸ்தான் ராணுவத்தின் பல்வேறு ஒடுக்குமுறைகளைச் சந்தித்தார்கள்.

இந்த ஒடுக்குமுறை 1970களில் உச்சம் தொட்ட நிலையில், ஷேக் முஜ்பூர் ரஹ்மான் தலைமையில் கிளர்ச்சி வெடித்தது. 1971ஆம் ஆண்டு கிழக்கு பாகிஸ்தான் விடுதலை போர் நடைபெற்ற நிலையில், அன்றைய இந்திய பிரதமர் இந்திரா காந்தி பாகிஸ்தானுக்கு எதிராக ராணுவ நடவடிக்கை மேற்கொண்டு, வங்கதேசம் தனி நாடாக உருவாக முக்கிய காரணியாக அமைந்தார்.

இதையும் படிங்க: குரங்கம்மை பரவல் - தன்பாலின உறவில் ஈடுபடுவோருக்கு WHO முக்கிய அறிவுரை

இந்த போரின் போது பாகிஸ்தான் ராணுவம் வங்கதேச மக்கள் மீது பல்வேறு போர் குற்றங்கள் மேற்கொண்டது ஆதாரப்பூர்வமாக நிறுவப்பட்டு வருகிறது. வங்கதேசம் விடுதலை அடைந்த பின்னரும், பாகிஸ்தான் ராணுவத்துடன் இணைந்து அங்கிருந்த மக்களுக்கு எதிராக போர்க்குற்றத்தில் ஈடுபட்டவர்கள் மீது அந்நாட்டு நீதிமன்றம் தனி விசாரணை நடத்தி வருகிறது. அதன்படி, பாகிஸ்தான் ராணுவத்துடன் இணைந்து வங்கதேச மக்களுக்கு எதிராக போர்க்குற்றத்தில் ஈடுபட்ட ரசாகார் பாஹினி என்ற அமைப்பைச் சேர்ந்த ஆறு பேருக்கு மரண தண்டனை வழங்கி வங்கதேசத்தின் சர்வதேச போர்க்குற்ற தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

அந்நாட்டின் தென்மேற்கு குல்னா மாவட்டத்தில் கொடூர கொலை மற்றும் வன்கொடுமைகளை இந்த ஆறு பேரும் மேற்கொண்டுள்ளனர். இவர்களை சாகும் வரை தூக்கிலிட வேண்டும் என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. போர் குற்றங்கள் நடைபெற்று 50 ஆண்டுகளுக்கு மேல் கடந்துள்ள நிலையிலும், வங்கதேசம் இந்த சம்பவங்களை ஆறாத வடுவாய் கருதி சுமந்து நிற்கிறது.

First published:

Tags: Bangladesh, Judgement, War