குல்பூஷண் ஜாதவுக்கு பாகிஸ்தான் அளித்த மரண தண்டனை செல்லுமா? - சர்வதேச நீதிமன்றம் விரைவில் தீர்ப்பு

குல்பூஷண் ஜாதவ் வழக்கில் வரும் 17-ம் தேதி தீர்ப்பு வழங்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Web Desk | news18
Updated: July 5, 2019, 9:50 AM IST
குல்பூஷண் ஜாதவுக்கு பாகிஸ்தான் அளித்த மரண தண்டனை செல்லுமா? - சர்வதேச நீதிமன்றம் விரைவில் தீர்ப்பு
குல்பூஷண் ஜாதாவ்
Web Desk | news18
Updated: July 5, 2019, 9:50 AM IST
இந்திய கடற்படை முன்னாள் அதிகாரி குல்பூஷண் ஜாதவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனு தொடர்பாக, சர்வதேச நீதிமன்றம் வரும் 17-ம் தேதி தீர்ப்பு வழங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

குல்பூஷண் ஜாதவ் இந்தியாவின் உளவு அமைப்பான ரா-விற்கு உளவு பார்ப்பதற்காக ஈரானில் இருந்து தங்கள் நாட்டுக்குள் நுழைந்ததாக பாகிஸ்தான் குற்றம்சாட்டியது. அந்த வழக்கை அவசரமாக விசாரித்த பாகிஸ்தான் நீதிமன்றம் அவருக்கு மரண தண்டனை விதித்தது.

அதனை எதிர்த்து நெதர்லாந்தில் உள்ள சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த இந்தியா, ஈரானுக்கு தொழில் விஷயமாக சென்ற குல்பூஷண் அங்கிருந்து கடத்தப்பட்டதாக வாதிட்டது.


மேலும் இந்த வழக்கு சம்பந்தமான விசாரணை நடந்து வந்ததால் மரண தண்டனையை நிறுத்தி வைக்க இந்தியா இடைக்கால தடை பெற்றது. இந்நிலையில், வரும் 17-ம் தேதி தீர்ப்பு வழங்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

 
அரசியல், சினிமா, வைரல், செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.


Loading...


First published: July 5, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...