Home /News /international /

குழந்தைகளுக்கான புற்றுநோய் தடுப்பு சர்வதேச நாள் - குழந்தைகளிடம் இந்த நோயை தடுப்பது எப்படி?

குழந்தைகளுக்கான புற்றுநோய் தடுப்பு சர்வதேச நாள் - குழந்தைகளிடம் இந்த நோயை தடுப்பது எப்படி?

  புற்றுநோய்

புற்றுநோய்

International Childhood Cancer Day 2022 : பொதுவாக குழந்தைகளிடம் புற்றுநோய் பரவுவதை மருத்துவ பரிசோதனைகள் மூலமாக தடுக்கவோ அல்லது கண்டறியவோ இயலாது.

புற்றுநோய் என்பது பெரியவர்களுக்கான நோய் மட்டுமல்ல. உலகெங்கிலும் ஏராளமான குழந்தைகளிடம் ஒவ்வொரு நாளும் புற்றுநோய் பாதிப்பு கண்டறியப்பட்டு வருகிறது. உலக சுகாதார அமைப்பிடம் உள்ள புள்ளிவிவரங்களின் படி, ஆண்டுதோறும் 0 முதல் 19 வயது வரையிலான வளர் இளம் பருவ குழந்தைகளில் 4 லட்சம் பேருக்கு வெவ்வேறு விதமான புற்றுநோய் ஏற்படுகிறது என்பது தெரியவந்துள்ளது.

மிகவும் தீவிரத்தன்மை உடைய இந்த நோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கிலும், பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் மிகுந்த போராட்டங்களுக்கு இடையே உயிர் வாழ்பவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாகவும், ஆண்டுதோறும் பிப்ரவரி 15ஆம் தேதி அன்று சர்வதேச குழந்தை புற்றுநோய் தடுப்பு நாள் அனுசரிக்கப்பட்டு வருகிறது.

குழந்தைகளை பாதிக்க காரணம் என்ன

பெரியவர்களுக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்படுகையில், அதற்கான காரணங்கள் தெளிவாக தெரிய வரும். ஆனால், குழந்தைகளை இந்த நோய் பாதிக்கும் போது, அதற்கான காரணங்களை அவ்வளவு எளிதாக கண்டறிய முடிவதில்லை. குழந்தைகளிடம் பரவும் ஒருசில வகை புற்றுநோய்களுக்கு மட்டுமே சுற்றுச்சூழல் பாதிப்பு அல்லது வாழ்வியல் மாற்றங்களால் ஏற்படுகின்றன என்ற காரணம் கண்டறியப்பட்டுள்ளது. இத்தகைய சூழலில் குழந்தைகளிடம் இது பரவாமல் தடுப்பது எப்படி?

பொதுவாக குழந்தைகளிடம் புற்றுநோய் பரவுவதை மருத்துவ பரிசோதனைகள் மூலமாக தடுக்கவோ அல்லது கண்டறியவோ இயலாது. ஆகவே, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைப்பிடிப்பதன் மூலமாக மட்டுமே, குழந்தைகள் வளரும் சமயத்தில் புற்றுநோய் ஏற்படாமல் தடுப்பதற்கான வாய்ப்புகள் ஆகும்.

இதையும் படியுங்கள் : சமீப நாட்களாக முடி உதிர்வு அதிகமாக இருக்கிறதா..? உடனே இந்த ஹோம் ரெமடியை டிரை பண்ணுங்க

இணைநோய்களுடன் பரவக் கூடும்

ஹெச்ஐவி, மலேரியா, எப்ஸ்டெயின்-பார் வைரஸ் போன்ற பாதிப்பு கொண்ட குழந்தைகளுக்கு இளம் வயதிலேயே புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இந்த நோய்களை ஒத்த நோய்த்தொற்றுகள் காரணமாகவும் குழந்தைகள் இடையே புற்றுநோய் ஏற்படும் அபாயம் அதிகரிக்கும். ஆகவே, புற்றுநோய்க்கு வழிவகுக்க கூடிய, நீண்டகால தொற்றுநோய் ஏற்பட்டு விடாமல் தடுக்கும் வகையில், அவற்றுக்கு எதிராக தடுப்பூசி செலுத்திக் கொள்வது அவசியமாகும்.

சிகிச்சை விஷயத்தில் நாடுகள் இடையே நிலவும் வேறுபாடு

மருத்துவ பரிசோதனை, சிகிச்சை கொடுப்பதற்கான உள்கட்டமைப்புகள் பெரிய அளவில் இருக்கும் பணக்கார நாடுகளில், குழந்தைகள் புற்றுநோயால் பாதிக்கப்படும்போது, அவர்கள் உயிர் பிழைக்கும் வாய்ப்பு 80 சதவீதமாக உள்ளது. ஆனால், போதிய வசதிகள் இல்லாத ஏழை நாடுகளில் குழந்தைகள் உயிர் பிழைக்கும் வாய்ப்பு 20 சதவீதம் மட்டுமே. சரியான நேரத்தில், முறையான சிகிச்சைகளை அளித்தால், இந்த நோயால் பாதிக்கப்படும் குழந்தைகள் உயிர் வாழ்வதற்கான வாய்ப்புகளை அதிகரிக்க முடியும்.

இதையும் படியுங்கள் : குழந்தைகளுக்கு குட் டச், பேட் டச் பற்றி தெளிவாக சொல்லி கொடுப்பது எப்படி?

எல்லா குழந்தைகளையும் முழுவதுமாக குணப்படுத்த முடியாவிட்டாலும் கூட, சில சமயங்களில் பெரிய அளவுக்கு தொந்தரவுகள் இன்றி, வாழ்க்கையை அவர்கள் நிறைவு செய்ய முடியும்.
Published by:Sankaravadivoo G
First published:

Tags: Cancer, World Cancer Day

அடுத்த செய்தி