இலங்கையில் கடந்த மார்ச் மாதம் முதலே அசாதாரண சூழல் நிலவி வருகிறது. கோவிட் லாக்டவுன் காலத்தில் ஏற்பட்ட பொருளாதார முடக்கத்தின் தாக்கம் அந்நாட்டில் வரலாறு காணாத பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. சுதந்திர இலங்கை காணாத அளவிற்கு அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடு, விலைவாசி உயர்வு போன்ற பிரச்னைகள் கொழுந்து விட்டு எரிந்து வருகின்றன.ரஷ்யா உக்ரைன் போரின் தாக்கம் காரணமாகவும் கச்சா எண்ணெய் விலை உயர்வு ஏற்பட்டதால், இது இலங்கையின் பொருளாதாரத்தில் கூடுதல் அடியாக விழுந்தது.
அடிப்படை உணவு பொருள்கள் பெறவே மக்கள் நீண்ட சிரமத்திற்கு ஆளான நிலையில், நாள்தோறும் 15 மணிநேரத்திற்கும் அதிகமான மின்வெட்டு போன்ற சிரமங்களை சந்தித்த மக்கள் அரசுக்கு எதிராக வீதியில் களமிறங்கி பெரும் போராட்டங்களை நடத்த தொடங்கினர்.
நாட்டின் இந்த மோசமான சீர்கேட்டிற்கு ஆட்சியில் உள்ள ராஜபக்சே குடும்பமே காரணம் எனக் கூறி பொதுமக்கள் அவர்களுக்கு எதிராக தொடர் போராட்டங்களை நடத்தினர். மக்களின் தொடர் அழுத்தத்தை தாங்க முடியாமல் மகிந்தா ராஜபக்சே பிரதமர் பதவியை ராஜினாமா செய்து அரசை விட்டு வெளியேறினார். அதைத் தொடர்ந்து அவசர கால ஏற்பாடாக ரணில் விக்ரமசிங்கே பிரதமராக பொறுப்பேற்றார். ரணில் பிரதமராகப் பொறுப்பேற்று சுமார் ஒரு மாத காலமே ஆன நிலையில், கடந்த வாரம் மீண்டும் ஆட்சியாளர்களுக்கு எதிராக இலங்கையில் போராட்டங்கள் வெடிக்க ஆரம்பித்தன.அதிபராக உள்ள கோத்தபயா மற்றும் பிரதமர் ரணில் ஆகிய இருவரும் உடனடியாக பதவி விலக வேண்டும் எனக் கூறி தலைநகர் கொழும்புவை ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் முற்றுகையிடத் தொடங்கினர்.
தொடர்ந்து கொழும்புவில் உள்ள அதிபர் மாளிகையை அந்நாட்டின் போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டு கைப்பற்றி நிலையில், அதிபர் கோத்தபய ராஜபக்சே தனது குடும்பத்தினருடன் அங்கிருந்து தப்பித்து தலைமறைவாகியுள்ளார். அதிபர் மாளிகைக்குள் புகுந்து போராட்டக்காரர்கள் அதகளம் செய்து வரும் நிலையில், ஒரு நபர் இலங்கை அதிபரிடம் இன்ஸ்டாகிராமில் சார், வீட்டில் சின்ன பின் சார்ஜர் இல்லையா என கேள்வி எழுப்பியுள்ளார். இந்த பதிவின் ஸ்க்ரீன்ஷாட் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. அந்த நபர் எழுப்பிய கேள்விக்கு அதிபர் தரப்பு கணக்கில் இருந்து ஆட்டோமெட்டிக் பதில் ஒன்றும் வந்துள்ளது.
இதையும் படிங்க: இலங்கையில் 2வது நாளாக தொடரும் போராட்டம்.. குடும்பம் குடும்பமாக வந்து அதிபர் மாளிகையில் பொழுதை கழிக்கும் பொதுமக்கள்
அதில் 'எங்களை தொடர்பு கொண்டமைக்கு நன்றி, உங்கள் முழு பெயர், தொலைபேசி போன்ற தகவல்களை தாருங்கள்' என ஆட்டோ மோட்டில் இருந்து பதிவிடுமாறு பதில் வந்துள்ளது.
அதிபர் மாளிகையை முற்றுகையிட்ட போராட்டக்காரர்கள் அங்குள்ள நீச்சல்குளங்களில் நீச்சலடித்தும், ஜிம்மில் உடற்பயிற்சி செய்தும், கிச்சனில் விதவிதமாக உணவுகளை சாப்பிட்டும் எஞ்சாய் செய்யும் காணொளிகள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகின்றன. இந்நிலையில், அதிபரிடம் ஒருவர் மொபைல் சார்ஜர் கேட்டு நக்கலடித்த சம்பவம் ரணகளத்திலும் சிரிப்பலையை உருவாக்கியுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Gotabaya Rajapaksa, Instagram, Sri Lanka, Sri Lanka political crisis, Sri Lanka President