ஹோம் /நியூஸ் /உலகம் /

உலகளவில் மீண்டும் முடங்கிய இன்ஸ்டாகிராம் சேவை- வருத்தம் தெரிவித்த நிறுவனம்!

உலகளவில் மீண்டும் முடங்கிய இன்ஸ்டாகிராம் சேவை- வருத்தம் தெரிவித்த நிறுவனம்!

இன்ஸ்டாகிராம் முடங்கியது

இன்ஸ்டாகிராம் முடங்கியது

தங்களது கணக்குகளை கையாள்வதில் பயனர்கள் சந்தித்து வரும் சிரமத்திற்கு இன்ஸ்டாகிராம் நிறுவனம் வருத்தம் தெரிவித்துள்ளது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  மிகப் பிரபலமான சமூக வலைதளமான இன்ஸ்டாகிராம் உலகளவில் திடீரென முடங்கியுள்ளது.

  சமூகவலைதளங்களான டிவிட்டர், பேஸ்புக்கிற்கு அடுத்தப்படியாக தற்போது அதிகளவில் இளைஞர்கள் பயன்படுத்தும் சமூகவலைதளமாக இன்ஸ்டாகிராம் இருக்கிறது. அதேநேரம் இந்த சமூக வலைதளங்கள் ஏதோ சில தொழில்நுட்ப காரணங்களால் அவ்வப்போது முடங்குவதும், அதனால் யூசர்கள திணறுவதும் வாடிக்கையாக நிகழ்ந்து வருகிறது. அதிலும், இன்ஸ்டாகிராம் வலைதளம் அடிக்கடி முடங்கி வருகிறது.

  ஏற்கெனவே கடந்த ஜூலை மாதத்தில் மட்டும்  3முறை இன்ஸ்டாகிராம் முடங்கியிருக்கிறது. ஜூலை 5ஆம் தேதி அன்றும், அதைத் தொடர்ந்து 6ஆம் தேதி புதன்கிழமை அன்றும் அதைத்தொடர்ந்து 19-ம் தேதியும் இன்ஸ்டாகிராம் முடங்கியது.

  இந்நிலையில் நேற்று இரவு இன்ஸ்டாகிராம் செயலி உலகளவில் முடங்கியது. இதனால் அதன் பயனாளர்கள் பலரும் நேற்றிரவிலிருந்து ட்விட்டர் போன்ற பிற சமூக வலைதளங்கள் மூலம் புகார் அளித்தனர். பயனர்கள் பலரும் தங்களது கணக்குகள் தற்காலிகமாக சஸ்பெண்ட் செய்யப்பட்டதாக தங்களுக்கு செய்தி வந்ததாக நேற்று புகார் அளித்திருந்தனர்.

  இதையடுத்து இந்த புகார் குறித்து இன்ஸ்டாகிராம் நிறுவனம் வருத்தம் தெரிவித்துள்ளது. உலகளவில் சுமார் 8 மணிநேரம் முடங்கிய இன்ஸ்டாகிராம் சேவை மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பியதாகவும் தகவல் தெரிவித்துள்ளது.

  Image

  இது குறித்து இன்ஸ்டாகிராம் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், 'உங்களில் சிலருக்கு உங்கள் இன்ஸ்டாகிராம் கணக்கை அணுகுவதில் சிக்கல் இருப்பதை நாங்கள் அறிவோம். நாங்கள் அதை ஆராய்ந்து வருகிறோம், சிரமத்திற்கு வருந்துகிறோம்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

  மேலும் உலகெங்கிலும் உள்ள இன்ஸ்டாகிராம் பயனர்கள் தங்கள் இன்ஸ்டாகிராம் கணக்குகளை அணுகுவதில் சிக்கல் இருந்தது. சில இன்ஸ்டாகிராம் கணக்குகளில் தங்களை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை தற்காலிகமாக மாறுதல் அடைந்திருக்கலாம். ஆனால்  இன்ஸ்டாகிராம் செயலியில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு சரி செய்யப்பட்டுவிட்டதாக ட்விட்டரில் அந்நிறுவனம் ட்விட்டரில் தகவல் தெரிவித்துள்ளது.

  8 மணி நேரம் இன்ஸ்டாகிராம் முடங்கியதால் அதன் பயனீட்டாளர்கள் மிகவும் குழப்பத்தில் இருந்தனர். மீண்டும் இன்ஸ்டாகிராம் செயலி இயங்கியதுமே நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

  Published by:Lakshmanan G
  First published:

  Tags: Instagram, Technology