ஹோம் /நியூஸ் /உலகம் /

ரஷ்யாவில் நாளை முதல் இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக்குக்குத் தடை... 8 கோடி யூசர்களுக்கு பாதிப்பு

ரஷ்யாவில் நாளை முதல் இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக்குக்குத் தடை... 8 கோடி யூசர்களுக்கு பாதிப்பு

ரஷ்யா விதித்துள்ள தடை பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் சமூக வலைதளங்ளுக்கு மட்டுமே பொருந்தும். வாட்ஸ்ஆப் செயல்படுவதற்கு எந்த தடையும் ரஷ்யாவில் விதிக்கப்படவில்லை.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

ரஷ்யாவில் இன்ஸ்டாகிராம் மீதான தடை நாளை முதல் நடைமுறைக்கு வருகிறது. இதனால் 8 கோடி ரஷ்ய யூசர்கள் பாதிக்கப்படுவார்கள் என்று இன்ஸ்டாகிராம் நிறுவனம் தெரிவித்துள்ளது.

உக்ரைன் மீது ரஷ்யா அதிரடி தாக்குதல் நடத்தி வரும் நிலையில், ரஷ்ய அதிபர் புதினை கொல்ல வேண்டும் என்பது போன்ற பதிவுகள் பேஸ்புக்கில் வெளிவந்தன. இதற்கு அனுமதித்த ஃபேஸ்புக் நிறுவனத்திற்கு ரஷ்யா தரப்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

இந்த சம்பவம் நடந்த ஒரு நாள் மட்டுமே ஆகியிருக்கும் நிலையில், ரஷ்யாவில் இன்ஸ்டாகிராமுக்கு தடை விதித்து அதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டுள்ளது. இதன் அடிப்படையில் நாளை முதல் இந்த தடை நடைமுறைக்கு வரவுள்ளது.

இதையும் படிங்க - தொடரும் ரஷ்யாவின் தாக்குதல்... உக்ரைனில் செயல்படும் தூதரகத்தை மாற்றுகிறது இந்தியா

இதுகுறித்து இன்ஸ்டாகிராமின் தலைவர் ஆடம் மோசேரி கூறுகையில், 'திங்கள் முதல் ரஷ்யாவில் இன்ஸ்டாகிராம் செயல்படாது. இதனை 8 கோடிப்பேர் ரஷ்யாவில் பயன்படுத்துகிறார்கள். ரஷ்யாவுக்கு வெளியேவும் அந்நாட்டை சேர்ந்தவர்கள் அதிக எண்ணிக்கையில் இன்ஸ்டாகிராமை பயன்படுத்துகின்றனர். ரஷ்ய அரசின் நடவடிக்கை அதிர்ச்சி அளிக்கிறது' என்று கூறியுள்ளார்.

நாளை முதல் இன்ஸ்டாகிராம் ரஷ்யாவில் செயல்படாது என்பதை அந்நாட்டு அரசு நிறுவனங்கள் உறுதி செய்துள்ளன. இந்த தடை பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் சமூக வலைதளங்ளுக்கு மட்டுமே பொருந்தும். வாட்ஸ்ஆப் செயல்படுவதற்கு எந்த தடையும் ரஷ்யாவில் விதிக்கப்படவில்லை.

இதையும் படிங்க - சீனாவை மீண்டும் ஆட்டிப்படைக்கும் கொரோனா - 19 மாகாணங்களில் வேகமெடுப்பதால் கெடுபிடிகள்

இதற்கிடையே, உக்ரைன் தலைநகர் கீவ்-வுக்கு 25 கிலோ மீட்டர் தூரத்தில் ரஷ்ய படைகள் உக்கிர தாக்குதல் நடத்தி வருகின்றன. முக்கிய நகரங்கள் சுற்றி வளைக்கப்பட்டு தொடர்ந்து தாக்கப்பட்டு வருவதாக உக்ரைன் குற்றம்சாட்டியுள்ளது.

உக்ரைன் மீதான போருக்கு செல்ல தங்களது மகன்களுக்கு அனுமதி வழங்க கூடாது என ரஷ்ய தாய்மார்களை அதிபர் செலன்ஸ்கி கேட்டுக்கொண்டுள்ளார். இளைஞர்களை கட்டாய ராணுவ சேவையில் ஈடுபடுத்துவதாக கடந்த புதன் கிழமை ரஷ்யா ஒப்புக்கொண்டது. இதனை தொடர்ந்து அதிபர் செலன்ஸ்கி, இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.

First published:

Tags: Instagram, Russia - Ukraine