Home /News /international /

கனடாவில் இருந்து அமெரிக்காவுக்கு பரவிய ட்ரக் ஓட்டுனர்கள் போராட்டம்...

கனடாவில் இருந்து அமெரிக்காவுக்கு பரவிய ட்ரக் ஓட்டுனர்கள் போராட்டம்...

சட்டத்தை மீறி, அமைதியை சீர்குலைப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று, ட்ரக் லாரி ஓட்டுனர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சட்டத்தை மீறி, அமைதியை சீர்குலைப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று, ட்ரக் லாரி ஓட்டுனர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சட்டத்தை மீறி, அமைதியை சீர்குலைப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று, ட்ரக் லாரி ஓட்டுனர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கொரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து கனடாவில் ட்ரக் ஓட்டுனர்கள் நடத்திய போராட்டம் தற்போது அமெரிக்காவிலும் பரவத் தொடங்கியுள்ளது. கலிபோர்னியாவை சேர்ந்த ட்ரக் லாரி ஓட்டுனர்கள், தங்களது எதிர்ப்பை தெரிவிக்கும் விதமாக தலைநகர் வாஷிங்டனுக்கு பேரணியாக சென்றனர்.

கொரோனா பரவலை தடுப்பதற்காக கனடா நாட்டில் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டன. அங்கு, பொது இடங்களுக்கு செல்வோர் கண்டிப்பாக 2 டோஸ் தடுப்பூசியை செலுத்தியிருக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த உத்தரவால், அங்கு ட்ரக் லாரி ஓட்டுனர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். கனட அரசின் உத்தரவைக் கண்டித்து லாரி ஓட்டுனர்கள் ட்ரக்குகளில் பேரணியாக சென்றனர். இதனால் அரசின் முக்கிய அலுவல்கள் பாதிக்கப்பட்டதால், அவசர நிலையை கனட பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்தார்.

ட்ரக் லாரி டிரைவர்கள் நடத்திய போராட்டம் உலகம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டது. தற்போது போராட்டம் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டதால், அவசர நிலை கனடாவில் திரும்பப் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் கனடா போராட்டத்தால் ஈர்க்கப்பட்ட அமெரிக்க ட்ரக் லாரி டிரைவர்கள் தற்போது போராட்டத்தில் ஈடுபடத் தொடங்கியுள்ளது.

இதையும் படிங்க - உக்ரைனில் ராணுவச் சட்டம் அமல்: அதிபர் அறிவிப்பு

கலிபோர்னியா மாகாணத்திலிருந்து ட்ரக்குகளில் புறப்பட்ட லாரி ஓட்டுனர்கள் பேரணியாக வாஷிங்டனை நோக்கி சென்றனர். இதில் 30-க்கும் அதிகமான 18 சக்கர ட்ரக் லாரிகள், 50-க்கும் அதிகமான ட்ரக்குககள் உள்ளிட்டவை பங்கேற்றன. இதுகுறித்து பேசிய 61 வயதாகும் ட்ரக் ஓட்டுனர் ரோன் கோல்மேன், 'இது எங்களுடைய சுதந்திரம், இது எங்கள் மனித உரிமை, இதுவரை நடந்தது எல்லாம் போதும்.கொரோனா கட்டுப்பாடுகள் என்ற பெயரில் எங்கள் வாழ்வாதாரத்தை பாதிப்படைய செய்யும் எதனையும் அரசு மேற்கொள்ள வேண்டாம்' என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க - போர்த் தருனத்தில் ரஷ்யாவில் இருப்பது கிளர்ச்சியூட்டுகிறது - பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்

ட்ரக் ஓட்டுனர்களின் இந்த போராட்டத்திற்கு கலிபோர்னியா மாகாண நிர்வாகம் கண்டனம் தெரிவித்துள்ளது. சட்டத்தை மீறி, அமைதியை சீர்குலைப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று, ட்ரக் லாரி ஓட்டுனர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கொரோனாவால் மிக அதிகமாக பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்றாக அமெரிக்கா இருந்து வருகிறது. அங்கு 7 கோடி 78 லட்சத்து 46 ஆயிரத்து 164 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 9 லட்சத்து 28 ஆயிரத்து 350 பேர் உயிரிழந்துள்ளார்கள்.
Published by:Musthak
First published:

Tags: United States of America

அடுத்த செய்தி