32-ம் வயதில் கார் விபத்தில் சிக்கிய பெண்... 27 ஆண்டுகளுக்குப் பின் கண்விழித்தார்!

4 வயது மகனை 31 வயது இளைஞராகப் பார்த்த முனிரா மிகவும் அதிர்ச்சி அடைந்துள்ளார்.

Web Desk | news18
Updated: April 23, 2019, 7:19 PM IST
32-ம் வயதில் கார் விபத்தில் சிக்கிய பெண்... 27 ஆண்டுகளுக்குப் பின் கண்விழித்தார்!
முனிரா (படம்-The National)
Web Desk | news18
Updated: April 23, 2019, 7:19 PM IST
அரபு நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் 27 ஆண்டுகளுக்குப் பின் கோமாவிலிருந்து கண் விழித்துள்ளது மருத்துவ உலகில் ஆச்சர்யமாகப் பார்க்கப்படுகிறது.

முனிரா அப்துல்லா என்ற பெண் தன்னுடைய 32-ம் வயதில் தனது 4 வயது மகனை பள்ளிக்கு அழைத்துச் சென்றுள்ளார். அப்போது ஏற்பட்ட ஒரு விபத்தில் மகனைக் காப்பற்ற முயன்று விபத்தில் சிக்கிக்கொண்டார் முனிரா. அன்றிலிருந்து இன்று வரையில் 27 ஆண்டுகளாக கோமாவில் இருந்துள்ளார் முனிரா.

மருத்துவர்கள் பலரும் அவர் பிழைப்பதற்கான வாய்ப்பு இல்லை என்று கைவிரித்துவிட்டனர். இருந்தபோதும் அவரது குடும்பத்தார் நம்பிக்கை உடன் சிகிச்சை அளித்து வந்தனர். தற்போது அவர் தனது 27 ஆண்டு கால கோமாவிலிருந்து மீண்டுள்ளார்.


4 வயது மகனை 31 வயது இளைஞராகப் பார்த்த முனிரா மிகவும் அதிர்ச்சி அடைந்துள்ளார். புது உலகில் கண் விழித்திருக்கும் முனிராவுக்குத் தற்போது சிறப்பு சிகிச்சை பெற்று வருகிறார். லண்டனில் உள்ள ஒரு சிறப்பு மருத்துவமனைக்கு அவர் உயரிய சிகிச்சைக்காக அனுமதிக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.

மேலும் பார்க்க: ரஜினியின் தேர்தல் தர்பார்
First published: April 23, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...