அமைச்சரை கத்தியால் குத்திய நபர்... பாதுகாப்புத்துறை அமைச்சருக்கே பாதுகாப்பு இல்லை!

அமைச்சரை கத்தியால் குத்திய நபர்... பாதுகாப்புத்துறை அமைச்சருக்கே பாதுகாப்பு இல்லை!
  • News18
  • Last Updated: October 13, 2019, 12:42 PM IST
  • Share this:
இந்தோனேசிய பாதுகாப்புத்துறை அமைச்சரை கத்தியால் குத்திய நபரை பாதுகாப்பு படையினர் கைது செய்தனர்.

இந்தோனேஷிய தலைநகரம் ஜகார்தாவின் பாண்டெக்லாங் பகுதியில் பாதுகாப்புத்துறை அமைச்சர் விராண்டோ காரில் வந்து இறங்கிய போது, அங்கிருந்த ஒருவர் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து கண் இமைக்கும் நேரத்தில் அமைச்சர் வயிற்றில் குத்தினார்.

இதையடுத்து ஹெலிகாப்டரில் ஜகார்த்த ராணுவ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அமைச்சருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.


அங்கு வந்த அதிபர் ஜோகோ விடோடோ-விடம், அமைச்சரின் உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவர்கள் கூறினர். கைதான நபருக்கு ஐ.எஸ். தீவிரவாதிகளுடன் தொடர்பிருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also watch

First published: October 13, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்