ஹோம் /நியூஸ் /உலகம் /

திடீரென சாம்பலை கக்கும் இந்தோனேசியாவின் மவுண்ட் சினாபுங் எரிமலை - மக்கள் அச்சம்!

திடீரென சாம்பலை கக்கும் இந்தோனேசியாவின் மவுண்ட் சினாபுங் எரிமலை - மக்கள் அச்சம்!

எரிமலை

எரிமலை

சினாபுங் எரிமலை வெள்ளை சாம்பலை கக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவியுள்ளது. அதில், மலையை சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள் அச்சத்தில் இருப்பது தெரிகிறது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

இந்தோனேசியா நிலநடுக்கம், சுனாமி, நிலச்சரிவு, வெள்ளம், எரிமலை கொந்தளிப்பு என பல்வேறு இயற்கை சீற்றங்களாலும், பேரிடர்களாலும் அடிக்கடி பாதிக்கப்பட்டு வரும் நாடு. அந்த வகையில் இந்தோனேசியாவின் மவுண்ட் சினாபுங் எரிமலை கடந்த செவ்வாயன்று 5 கிமீ (3.1 மைல்) உயரத்தில் சாம்பலை கக்கி விண்ணை முட்டும் அளவிற்கு பரவியதால் அங்குள்ளவர்கள் பீதியடைந்துள்ளனர்.

தற்போது உயரமாக சாம்பலை கக்கியதால் வடக்கு சுமத்ராவில் இரண்டாம் நிலை எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை உயிர்சேதம் ஏதும் ஏற்படவில்லை. எனினும், மலையில் இருந்து 3 கிலோமீட்டர் சுற்றளவுக்கு மக்கள் யாரும் இருக்க வேண்டாம் என அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

https://www.youtube.com/watch?v=lWzW_vcHLAY&feature=youtu.be

சினாபுங் எரிமலை வெள்ளை சாம்பலை கக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவியுள்ளது. அதில், மலையை சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள் அச்சத்தில் இருப்பது தெரிகிறது.

இந்தோனேசியாவைச் சார்ந்த விர்டா பிஆர் சிட்டெபு (Wirda Br Sitepu), ராய்ட்டர்ஸிடம், ``இப்போது நிலைமை அமைதி அடைந்து விட்டது. எரிமலை மீண்டும் வெடிக்கவில்லை. அதோடு சாம்பலும் குறைந்துவிட்டது” என்று தெரிவித்துள்ளார். இந்தோனேசியா `பசிபிக் ரிங் ஆஃப் ஃபயர்’ என்று அழைக்கப்படுகிறது. இது மிகவும் நில அதிர்வுக்குரிய மண்டலமாகும். அங்கு பூமியின் மேலோட்டத்தில் வெவ்வேறு தட்டுகள் மோதி ஏராளமான பூகம்பங்கள் மற்றும் எரிமலைகளை உருவாக்குகின்றன.

இந்தோனேசியாவில் மட்டும் சுமார் 130 செயல்படும் எரிமலைகள் இருக்கின்றன. மற்ற எந்த நாட்டை காட்டிலும் இந்தோனேசியாவில் மட்டுமே இவ்வளவு அதிகமான எரிமலைகள் இருக்கின்றன. பல நூற்றாண்டுகளாக அமைதியாக இருந்த சினாபுங் எரிமலை 2010-ம் ஆண்டில் வெடித்தது. முன்னதாக ஜாவா மற்றும் ஜாகர்த்தா மாகாணத்திற்கு இடையே அமைந்துள்ள மவுண்ட் மெரபி எரிமலை சீற்றத்துடன் வெடித்தது. இதன் காரணமாக வானில் புகை மூட்டங்கள் சூழ்ந்தது. இதனைத் தொடர்ந்து அங்கு ரெட் அலர்ட் விடப்பட்டது.  இந்தோனேசியாவில் ஆக்ட்டிவாக இருக்கக் கூடிய சக்தி வாய்ந்த எரிமலைகளில் மவுண்ட் மெரபி எரிமலையும் ஒன்று. 2010-ம் ஆண்டு மெரபி எரிமலை வெடித்ததில் சுமார் 350 பேர் பலியாகி உள்ளனர்.

Published by:Ram Sankar
First published:

Tags: Indonesia