15 வருடங்களாக பெண்ணை வன்புணர்வு செய்த சாமியார் கைது

news18
Updated: August 9, 2018, 3:35 PM IST
15 வருடங்களாக பெண்ணை வன்புணர்வு செய்த சாமியார் கைது
news18
Updated: August 9, 2018, 3:35 PM IST
இந்தோனேசியாவில்  13 வயதிலிருந்து (தற்போது வயது 28)  பெண்ணை 15 வருடமாக கடத்தி வைத்து தினமும் வன்புணர்வு செய்த 83 வயது போலி சாமியார் கைது செய்யப்பட்டுள்ளார்.

2003-ம் ஆண்டு 13 வயது சிறுமியை சிகிச்சைக்காக ஜகோ சாமியாரை அவரது பெற்றோர்கள் பார்க்க வந்துள்ளனர். அப்போது அவர் இந்தப் பெண்ணுக்கு மாற்று மருத்துவ முறையான மேஜிக்கல் கீலிங் முறையில் மருத்துவம் செய்யப் போவதாக கூறியுள்ளார். இதற்காக பெற்றோர்கள் அந்த பெண்ணை சாமியாரிடமே விட்டுச் சென்றுள்ளனர்.

திரும்பி வந்ததும் தன் பெண்  ‘எங்கே’ என பெற்றோர்கள் கேட்டதற்கு அவள் ’எங்கோ போய் விட்டாள், எனக்கு தெரியாது’ என பதில் சொல்லி அனுப்பியுள்ளார். பெற்றோர்களும் தேடிப் பார்த்தும் கிடைக்காமல் போலீஸில் புகார் அளித்து விட்டு சென்றுள்ளனர்.

15 வருடங்களுக்குப் பின் இந்தோனேசியாவின் பஜுகன் கிராமத்திற்கு அருகே உள்ள பாறை பிளவுகளுக்கு மத்தியில் உள்ள குகையில் இந்த பெண்ணை கண்டு பிடித்துள்ளனர்.போலீஸ் அறிக்கையின் படி, போலிச் சாமியார் ஜகோ அந்த பெண்ணிடம் அம்ரின் என்பவரின் புகைப்படத்தைக் காட்டி செக்ஸ் வைத்துக் கொள்ளும் போது அம்ரினின் ஆவி தன் உடம்புக்குள் புகுந்து விடும் எனக்கூறி சிறுமியை தினமும் வன்புணர்வு செய்துள்ளார்.

இவர் மீது வேறேதும் குற்றங்கள் இருக்கிறாதா? என்று போலீஸ் விசாரித்த போது  சாமியார் மீதுள்ள பயத்தினால் கிராம மக்கள் யாரும் பதிலளிக்கவில்லை என கமிஷனர் மக்டலேனா சிட்டோரஸ் கூறியுள்ளார்.
Loading...
பாதிக்கப்பட்ட பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 15 வருட குகை வாழ்க்கை அந்த பெண்ணின் மனநலனை எப்படி பாதித்துள்ளது என்பதை இனி கண்டறிந்து சிகிச்சை அளிக்க வேண்டுமெனவும் கூறினார்.  போலிச் சாமியார் ஜகோ குழந்தை பாதுகாப்பு சட்டத்தின் படி கைது செய்யப்பட்டு 15 வருட சிறைதண்டனை அளிக்கப்பட்டுள்ளது.
First published: August 9, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...