ஹோம் /நியூஸ் /உலகம் /

இந்தோனேசியாவில் சிகப்பு நிறத்தில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம்.. காரணத்தை படிங்க இன்னும் அதிர்ச்சியடைவீங்க..

இந்தோனேசியாவில் சிகப்பு நிறத்தில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம்.. காரணத்தை படிங்க இன்னும் அதிர்ச்சியடைவீங்க..

சிகப்பு நிறத்தில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம்

சிகப்பு நிறத்தில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம்

இந்தோனேசியாவில் சிகப்பு நிறத்தி தேங்கி நிற்கும் வெள்ளம் சமூக வலைதளங்களில் பேசும் பொருளாக மாறியுள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

இந்தோனேசியாவின் சென்ட்ரல் ஜாவாவில் உள்ள பெக்கலோங்கன் நகருக்கு தெற்கே அமைந்துள்ள ஜெங்க்காட் என்ற கிராமத்தில் ரத்த-சிவப்பு நிறத்தில் தேங்கி நிற்கும் வெள்ளநீர் காண்போர் மனதை பதைபதைக்க வைக்கிறது. இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் வைரலாகி நெட்டிசன்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. தற்போது, வெள்ளநீர் ஏன் சிவப்பு நிறத்தில் மாறியது என்பதற்கான விளக்கத்தையும் அப்பகுதி மக்கள் கொடுத்துள்ளனர். இந்தோனேசியாவில் பல இடங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. 

இதனால் மழைநீர் பெருக்கெடுத்து வெள்ளமாக மாறி அருகிலுள்ள கிராமங்களுக்குள் புகுந்துள்ளது. இதன் காரணமாக சாலைகளில் வெள்ளநீர் தேங்கி நிற்பதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஜெங்க்காட் கிராமத்தில் உள்ள பாடிக் உற்பத்தி மையத்திற்குள் வெள்ளம் புகுந்துள்ளது. இதன் காரணமாகவே அந்த கிராமத்தில் தேங்கி நிற்கும் வெள்ளநீர் சிகப்பு நிறத்தில் காட்சியளிக்கிறது. பாடிக் உற்பத்திக்கு பெயர் போன நகரம் தான் பெக்கலோங்கன். மேலும், பாடிக் என்பது துணிகளின் மீது வடிவங்கள் மற்றும் வரைபடங்களை சித்தரிக்க நீர் சார்ந்த சாயங்களுக்கு பதிலாக மெழுகு பயன்படுத்தும் ஒரு பாரம்பரிய இந்தோனேசிய முறை ஆகும்

இந்த சூழலில் வெள்ளநீர் பாடிக் மையத்திற்குள் நுழைந்ததால் அங்கிருந்த வேதிப்பொருட்கள் அனைத்தும் நீரில் கரைந்துள்ளன. அவை சிகப்பு நிறமாக மாறி ஊருக்குள் புகுந்துள்ளன. கடந்த மாதம் கூட ஏற்பட்ட வெள்ளத்தின் போது நகரின் வடக்கே மற்றொரு கிராமத்தில் வெள்ளம் பச்சை நிறத்தில் சூழ்ந்தது. இதற்கும் அப்பகுதியில் உள்ள சாய ஆலை தான் காரணம். அதேபோல, பெக்கலோங்கன் நகரத்தில் உள்ள ஆறுகளும் வெவ்வேறு வண்ணங்களைத் மாறுவது ஒன்றும் புதிதல்ல என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். தற்போது சிகப்பு நிறத்தில் தேங்கி நிற்கும் வெள்ளநீர் தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் பெரிதும் பகிரப்பட்டு வருகின்றன

அதற்கு அப்பகுதியைச் சேர்ந்த ஒரு ட்விட்டர் யூசர், சாலையில் சில நேரங்களில் ஊதா நிறத்தில் குட்டை தண்ணீர் தேங்கி நிற்கும் என்றும் கமெண்ட் செய்துள்ளார். இந்த சம்பவம் குறித்து பெக்கலோங்கன் பேரழிவு நிவாரணத் தலைவர் டிமாஸ் அர்கா யுதா கூறியதாவது, ரத்த நிறத்தில் காட்சியளிக்கும் வெள்ளம் தொடர்பாக வெளியிடப்பட்ட புகைப்படங்கள் அனைத்தும் உண்மையானவை என்பதை உறுதிப்படுத்தினார். வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பாடிக் சாயமே சிவப்பு வெள்ளத்திற்கு காரணம். சிறிது நேரம் கழித்து மழையுடன் கலந்தால் அது மறைந்துவிடும் என்று விளக்கம் அளித்துள்ளார்.  

இந்தோனேசியாவில் இதுபோன்ற சம்பவங்கள் அடிக்கடி நிகழ்வது சகஜம் தான் என்பது போல மக்கள் தங்கள் அன்றாட பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த ஆண்டின் தொடக்கத்தில் இன்தோனேசியா பகுதியில் வரலாறு காணாத மழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் சுமார் 40க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

Published by:Tamilmalar Natarajan
First published:

Tags: Indonesia