ஹோம் /நியூஸ் /உலகம் /

திருமணத்திற்கு முந்தைய உடலுறவு, லிவிங் டுகெதரை சட்டவிரோதமாக்கிய அரசு.. எதிர்க்கும் இளைஞர்கள் !

திருமணத்திற்கு முந்தைய உடலுறவு, லிவிங் டுகெதரை சட்டவிரோதமாக்கிய அரசு.. எதிர்க்கும் இளைஞர்கள் !

இந்தோனேசிய புது சட்டம்

இந்தோனேசிய புது சட்டம்

முன்மொழியப்பட்ட புதிய சட்டம் 2019 செப்டம்பரில் ஒரு முழு வரைவு வெளியிடப்பட்டபோது மாணவர்கள் தலைமையிலான குழு அதை எதிர்த்து போராட கிடப்பில் போடப்பட்டது

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Chennai, India

இந்தோனேஷியா ஒரு சர்ச்சைக்குரிய புதிய குற்றவியல் சட்டத்தை இயற்றியுள்ளது, அதில் திருமணத்திற்கு முந்தைய உடலுறவு மற்றும் சேர்ந்து வாழ்வதை சட்டவிரோதமாக அறிவித்துள்ளது. தென்கிழக்கு ஆசிய நாட்டில் சுதந்திரத்தை தடுப்பதாக இந்த சட்டம் உள்ளது என்று மக்கள் விமர்சித்து வருகின்றனர்.

புதிய சட்டங்கள் இந்தோனேசியர்கள் மற்றும் வெளிநாட்டினர் இருவருக்கும் பொருந்தும் என்று அந்நாட்டு அரசு குறிப்பிபட்டுள்ளது.  பாராளுமன்றத்தால் ஏகமனதாக அங்கீகரிக்கப்பட்ட புதிய குற்றவியல் சட்டம், 1946 இல் இந்தோனேசியா சுதந்திரம் அடைந்ததில் இருந்து நடைமுறையில் இருந்த கட்டமைப்பை மாற்றி அமைப்பதாக உள்ளது.

இதையும் படிங்க: ஏவுகணை சோதனை : இந்திய பெருங்கடலுக்குள் நுழைந்த சீன கண்காணிப்பு கப்பல்..!

வாக்கெடுப்புக்கு முன்னதாக பாராளுமன்றத்தில் சட்டம் மற்றும் மனித உரிமைகள் அமைச்சர், யசோனா லாவோலி, "நாங்கள் விவாதித்த முக்கியமான பிரச்சினைகள் மற்றும் பல்வேறு கருத்துகளுக்கு இடமளித்து புதிய சட்ட திருத்தத்தை உருவாக்க முயற்சித்தோம். காலனித்துவ குற்றவியல் சட்டத்தை விட்டு வெளியேறி புதிய தண்டனைச் சட்டத் திருத்தம் கொண்டு வர வேண்டிய நேரம் இது," என்று செய்தி வெளியிட்டது குறிப்பிடத்தக்கது..

முன்மொழியப்பட்ட புதிய சட்டம் 2019 செப்டம்பரில் ஒரு முழு வரைவு வெளியிடப்பட்டபோது மாணவர்கள் தலைமையிலான குழு அதை எதிர்த்து போராடியது. இது தனிப்பட்ட சுதந்திரங்களைக் குறைக்கும் என்றும் குறிப்பிட்டது. அந்த போராட்டத்தில் குறைந்தது 300 பேர் காயமடைந்தனர். பின்னர் தற்காலிகமாக கிடப்பில் போடப்பட்ட வரைவு தற்போது சட்டமாக மாற்றப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: அமெரிக்காவில் காவல்துறையில் ரோபோக்கள் பயன்பாடு - வலுக்கும் போராட்டம்!

உலகின் மிகப் பெரிய முஸ்லீம் பெரும்பான்மை நாடான இந்தோனேசியாவில், சமீப ஆண்டுகளில் மதப் பழமைவாதம் அதிகரித்து வருகிறது. மதுபானம் மற்றும் சூதாட்டம் தடைசெய்யப்பட்ட  அச்சே மாகாணம் உட்பட நாட்டின் சில பகுதிகளில் கடுமையான இஸ்லாமிய சட்டங்கள் ஏற்கனவே நடைமுறையில் உள்ளன. ஓரினச்சேர்க்கை மற்றும் பாலியல் தொழில் உள்ளிட்ட பல்வேறு குற்றங்களுக்காக இப்பகுதியில் பொது இடங்களில் கசையடிகள் தரும் வழக்கம் ஏற்கனவே நடைமுறையில் உள்ளன.

தற்போது திருமணம் இல்லாத உறவுகளும் சட்டப்படி குற்றம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது இளைஞர்களிடையே அதிருப்தியையும் கோபத்தையும் உருவாக்கி வருகிறது. தங்கள் உறவு குறித்த முடிவுகள் தங்கள் சுதந்திரத்திற்கு உட்பட்டது. ஆனால் அரசு அதை குற்றமாக்குவரது சரியன்று றன்று விவாதித்து வருகின்றனர். அதோடு LGBT மக்களுக்கு ஒரு குறிப்பிட்ட அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என்று சட்ட வல்லுநர்கள் கூறுகின்றனர்.

First published:

Tags: Indonesia, Law