ஹோம் /நியூஸ் /உலகம் /

இந்தோனேஷியா நிலநடுக்கம்.. சேதமடைந்த வீடுகள்.. அதிகரிக்கும் உயிரிழப்புகள்!

இந்தோனேஷியா நிலநடுக்கம்.. சேதமடைந்த வீடுகள்.. அதிகரிக்கும் உயிரிழப்புகள்!

நிலநடுக்கம்

நிலநடுக்கம்

2 ஆயிரத்து 200-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும், 13 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் மீட்புப்படையினர் தெரிவித்துள்ளனர்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  இந்தோனேஷியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 162-ஆக உயர்ந்துள்ளது.

  இந்தோனேஷியாவின் ஜாவா தீவுப்பகுதியில் உள்ள சியான்ஜுர் என்ற நகரில் இந்திய நேரப்படி, நேற்று காலை 11.51 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. 10 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்த இந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 5.6 அலகுகளாக பதிவாகியிருந்தது. மக்கள் அடர்த்திமிகுந்த பகுதியில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் ஏராளமான வீடுகள் சேதமடைந்தன.

  இதையும் படிங்க:காலநிலை மாற்றத்தால் அதிகரிக்கும் வானவில்கள் எண்ணிக்கை! பாதிப்புகள் உண்டா?

  இதையடுத்து, தேசிய பேரிடர் தணிப்பு அமைப்பினர் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். இதில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 162-ஆக உயர்ந்துள்ளது. மேலும், 326 பேர் காயமடைந்தனர்.

  2 ஆயிரத்து 200-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும், 13 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் மீட்புப்படையினர் தெரிவித்துள்ளனர். மீட்புப் பணிகள் தொடரும் நிலையில், உயிரிழப்பு மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.


  Published by:Murugadoss C
  First published:

  Tags: Earthquake in Indonesia, Indonesia