இந்தோனேஷியாவில் இருந்து 188 பேருடன் புறப்பட்ட விமானம் ஜாவா கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது.
ஜகார்தா விமான நிலையத்திலிருந்து பங்கல் பினாங் பகுதியை நோக்கி, காலை 6.20 மணிக்கு லையன் ஏர் விமானம் புறப்பட்டது. இதில் 3 குழந்தைகள், விமானப் பணியாளர்கள் 8 பேர் உள்ளிட்ட 188 பேர் பயணித்தனர். புறப்பட்ட 13 நிமிடங்களிலேயே கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை விமானம் இழந்தது. இதனால் விமானத்தின் சிக்னலை தேடும் பணி துரிதப்படுத்தப்பட்டது.
இந்நிலையில், டேன்ஜுங் பிரியோக் துறைமுக பகுதியில் ஜாவா கடலில் விமானம் விழுந்ததை சிலர் பார்த்ததாக இந்தோனேஷிய வானொலி தகவல் தெரிவித்துள்ளது. இதையடுத்து, விமானத்தை தேடும் பணிக்காக கப்பல்கள் மற்றும் மீட்புக் குழுவினர் முடுக்கிவிடப்பட்டுள்ளனர். போயிங் 737 - மேக்ஸ் ஜெட் வகையைச் சேர்ந்த இந்த விமானம் கடந்த ஆண்டுதான் பயன்பாட்டுக்கு வந்தது. அறிமுகமாகி ஒரு ஆண்டிலேயே விமானம் விபத்துக்குள்ளாகி இருப்பதால் அதில் தொழில்நுட்பக் கோளாறு ஏதேனும் இருந்திருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.
The Indonesian authorities have mounted a search and rescue operation for the missing Lion Air plane, which lost contact with air traffic controllers at 6.33 am today: The Straits Times https://t.co/NdeGCNq2kb
— ANI (@ANI) October 29, 2018
Also see...
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.