ஹோம் /நியூஸ் /உலகம் /

ஜி20 மாநாடு.. முக்கிய ஆலோசனைகள்.. இன்று இந்தோனேசியா செல்லும் பிரதமர் மோடி!

ஜி20 மாநாடு.. முக்கிய ஆலோசனைகள்.. இன்று இந்தோனேசியா செல்லும் பிரதமர் மோடி!

பிரதமர் மோடி

பிரதமர் மோடி

உக்ரைன் போர் மற்றும் அதனால் உலக அளவில் ஏற்பட்டுள்ள தாக்கங்கள் உள்ளிட்ட உலகளாவிய சவால்கள் குறித்து விவாதிக்கப்படும்

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • interna, Indiaindonesiaindonesia

  ஜி20 நாடுகள் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று இந்தோனேசியா செல்கிறார்.

  ஜி20 நாடுகளின் 17வது உச்சி மாநாடு இந்தோனேசியாவின் பாலி நகரில் நாளை தொடங்கி, இரண்டு நாட்கள் நடைபெறுகின்றன. இதையொட்டி மூன்று நாள் பயணமாக டெல்லியிலிருந்து, இன்று பாலி நகருக்கு பிரதமர் மோடி புறப்பட்டுச் செல்கிறார்.

  உணவு மற்றும் எரிசக்தி பாதுகாப்பு, டிஜிட்டல் மாற்றம் மற்றும் சுகாதாரம் ஆகிய மூன்று முக்கிய அமர்வுகளில் அவர் பங்கேற்க உள்ளார். உலகப் பொருளாதாரம், எரிசக்தி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகியவை குறித்தும் மற்ற நாடுகளின் தலைவர்களுடன் விவாதிக்கவுள்ளார்.

  அது மட்டுமன்றி ஜி 20 தலைவர்கள் சிலரையும் பிரதமர் மோடி சந்தித்து பேச உள்ளார்.

  இதையும் படிங்க | அடிப்படைவாதிகள் எதிர்ப்பு - பாகிஸ்தானிலிருந்து ஆஸ்கருக்கு தேர்வான படத்துக்கு அந்நாட்டிலேயே தடை

  உக்ரைன் போர் மற்றும் அதனால் உலக அளவில் ஏற்பட்டுள்ள தாக்கங்கள் உள்ளிட்ட உலகளாவிய சவால்கள் குறித்து மாநாட்டில் விரிவாக விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  Published by:Anupriyam K
  First published:

  Tags: G20 Summit, Indonesia, Narendra Modi, PM Modi