ஹோம் /நியூஸ் /உலகம் /

விபத்துக்குள்ளான விமானத்தின் கருப்பு பெட்டி: உண்மை வெளிவருமா?

விபத்துக்குள்ளான விமானத்தின் கருப்பு பெட்டி: உண்மை வெளிவருமா?

 • News18
 • 1 minute read
 • Last Updated :

  இந்தோனேஷியாவில் இருந்து 188 பயணிகளுடன் விபத்துக்குள்ளான விமானத்தின் கருப்புப் பெட்டி கண்டுபிடிக்கப்பட்டது.

  இந்தோனேஷியாவில் இருந்து 188 பேருடன் புறப்பட்ட விமானம் ஜாவா கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது. ஜகார்தா விமான நிலையத்திலிருந்து பங்கல் பினாங் பகுதியை நோக்கி, காலை 6.20 மணிக்கு லயன் ஏர் விமானம் புறப்பட்டது. இதில் 3 குழந்தைகள், விமானப் பணியாளர்கள் 8 பேர் உள்ளிட்ட 188 பேர் பயணித்தனர். புறப்பட்ட 13 நிமிடங்களிலேயே கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை விமானம் இழந்தது. இதனால் விமானத்தின் சிக்னலை தேடும் பணி துரிதப்படுத்தப்பட்டது.

  இந்தோனேஷியாவின் டேன்ஜுங் பிரியோக் துறைமுகப் பகுதியில் ஜாவா கடலில் விமானம் விழுந்ததை சிலர் பார்த்ததாக இந்தோனேஷிய வானொலி தகவல் தெரிவித்துள்ளது. இதையடுத்து, விமானத்தை தேடும் பணிக்காக கப்பல்கள் மற்றும் மீட்புக் குழுவினர் முடுக்கிவிடப்பட்டுள்ளனர். போயிங் 737 - மேக்ஸ் ஜெட் வகையைச் சேர்ந்த இந்த விமானம் கடந்த ஆண்டுதான் பயன்பாட்டுக்கு வந்தது. அறிமுகமாகி ஒரு ஆண்டிலேயே விமானம் விபத்துக்குள்ளாகி இருப்பதால் அதில் தொழில்நுட்பக் கோளாறு ஏதேனும் இருந்திருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

  விபத்து எவ்வாறு நடந்திருக்கலாம் என்பதை அறிய உதவும் கருப்பு பெட்டியை தேடும் பணியும் தீவிரபடுத்தப்பட்டது. கடலில் மூழ்கிய கருப்புப் பெட்டியை தேட ட்ரோன் மற்றும் லொகேடர் கருவிகள் பயன்படுத்தப்பட்டது. இதனைத்தொடர்ந்து இன்று கருப்பு பெட்டி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் விபத்து தொடர்பான விசாரணைகள் தீவிரப்படுத்தப்படும் எனத் தெரிகிறது.

  Published by:Saroja
  First published:

  Tags: Flight Crash, Lion Air