இந்தோனேசியாவில் பயங்கர பூகம்பம்; தரைமட்டமானது மருத்துவமனை: இடிபாடுகளில் சிக்கிய நோயாளிகள் ஊழியர்கள்

வீடுகள், மருத்துவமனை சேதம். | ஏ.பி.

பசிபிக் நெருப்பு வளையப் பகுதியில் இருக்கும் இந்தோனேசியாவில் நிலநடுக்கங்கள் அடிக்கடி ஏற்படுவது வழக்கம். 2018-ல் சுலாவேசியில் உள்ள பலு நகரில் ஏற்பட்ட பூகம்பத்துக்கு 1000 பேர் பலியாகியுள்ளனர்.

 • Share this:
  இந்தோனேசியாவின் சுலவேசி தீவில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 6.2 அலகாக பதிவாகியிருந்த இந்த நிலநடுக்கம் காரணமாக மருத்துவமனை ஒன்று தரைமட்டமானது. அதில் இருந்த நோயாளிகள், ஊழியர்களில் பலர் உள்ளே சிக்கிக்கொண்டனர்.

  இதுபற்றி தகவல் அறிந்த மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்குச் சென்று கட்டிட இடிபாடுகளை அகற்றி மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். 3 பேரின் உடல்கள் மீட்கப்பட்ட நிலையில், மேலும் சிலர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. மீட்பு பணி தொடர்ந்து நடைபெறுகிறது.

  இதேபோல் கவர்னரின் அலுவலகம் மற்றும் பல்வேறு வீடுகள் சேதமடைந்திருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

  இதுவரை 7 பேர் பலியாகியுள்ளனர். வெள்ளிக்கிழமை அதிகாலை 1 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கத்தின் மையம் மாஜீன் நகரத்துக்கு 6 கிமீ தொலைவில் இருந்தது. பூமிக்குக் கீழ் 10 கிமீ ஆழத்தில் பூகம்பம் ஏற்பட்டதால் சேதம் அதிகம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

  முதற்கட்ட தகவல்களின் படி மாஜீன் நகரில் 637 பேர் காயமடைந்ததாக செய்திகள் வெளியாகின.

  ஆனால் அண்டைப்பகுதிகளான மமுஜுவில் 24 பேர் காயமடைந்தனர்.

  பசிபிக் நெருப்பு வளையப் பகுதியில் இருக்கும் இந்தோனேசியாவில் நிலநடுக்கங்கள் அடிக்கடி ஏற்படுவது வழக்கம். 2018-ல் சுலாவேசியில் உள்ள பலு நகரில் ஏற்பட்ட பூகம்பத்துக்கு 1000 பேர் பலியாகியுள்ளனர்.

  இந்நிலையில் இன்று ஏற்பட்ட நிலநடுக்கம் 7 விநாடிகளுக்கு நீடித்தது. சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படாவிட்டாலும் மக்கள் அலறிப்பிடித்து உயரமான பகுதிகளுக்குச் சென்றனர். சுமார் 10,000 பேர் தற்காலிக முகாம்களில் உள்ளனர்.

  வீடுகள் சேதமடைந்த, பாலம் உடைந்த படங்கள் வெளியாகி வருகின்றன.
  Published by:Muthukumar
  First published: