அமெரிக்காவில் கமலா ஹாரீஸ் பதவியேற்றுள்ளதால் இந்திய - அமெரிக்க உறவு மேலும் வலுப்படும்: வெள்ளை மாளிகை

பதவிப் பிரமாணம் செய்யும் கமலா ஹாரிஸ்

கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அதிரடி உத்தரவுகளை பிறப்பித்திருக்கிறார். துணை அதிபராக கமலா ஹாரீஸ் பதவியேற்றுள்ளதால் இந்திய - அமெரிக்க உறவு மேலும் வலுப்படும் என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

 • Share this:
  அமெரிக்க அதிபராக பதவியேற்றுள்ள ஜோ பைடன், முதல் நாளிலேயே 15 அதிரடி உத்தரவுகளில் கையெழுத்திட்டுள்ளார். பிற அதிபர்களை விட, முதல் நாளில் ஜோ பைடன் கையெழுத்திட்ட ஆணைகளின் எண்ணிக்கை அதிகம் ஆகும்.

  அமெரிக்காவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை இரண்டரை கோடியை தாண்டியுள்ள சூழலில், அதிபர் ஜோ பைடன் அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டிருக்கிறார். அதன்படி அரசு ஊழியர்கள் உட்பட பொதுமக்கள் அனைவரும் 100 நாட்களுக்கு கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் எனவும் பைடன் உத்தரவிட்டுள்ளார். வெளிநாடுகளில் இருந்து அமெரிக்கா வருபவர்களுக்கும், பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

  அமெரிக்கா வரும் வெளிநாட்டவர்களுக்கு கொரோனா நெகடிவ் சான்றிதழ் கட்டாயம் எனவும், அமெரிக்கா வந்த பிறகு வெளிநாட்டவர்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அதிபர் பைடன் உத்தரவு பிறப்பித்துள்ளார். கொரோனா பரிசோதனை மற்றும் தடுப்பூசி போடும் பணிகளை துரிதப்படுத்த சுகாதாரத்துறைக்கு அதிபர் பைடன் உத்தரவிட்டுள்ளார்.

  அமெரிக்காவில் பள்ளிகளை மீண்டும் திறக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. கல்வியாளர்களின் ஆரோக்கியமும், பாதுகாப்பும் முக்கியம் என்றும் மாணவர்களுக்கு தேவையான ஆதரவை ஆசிரியர்கள் வழங்க வேண்டும் என்றும் அதிபரின் மனைவி ஜில் பைடன் கூறினார்.

  புதிய அதிபராக ஜோ பைடன் பொறுப்பேற்றுள்ள நிலையில், அமெரிக்க - இந்திய நல்லுறவு புதிய உச்சத்துக்கு செல்லும் என வெள்ளை மாளிகையின் செய்தி தொடர்பாளர் ஜென் சாகி தெரிவித்துள்ளார். இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரீஸ் துணை அதிபராக உள்ளதால், இருநாடுகளின் உறவு மேலும் வலுப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

  மேலும் படிக்க... கடலூரில் குடிபோதையில் இருந்த மகன்... தந்தையை இரும்பு கம்பியால் அடித்துக்கொன்ற கொடூரம்..

  ஜோ பைடன் அதிபராக பதவியேற்றதற்கு கண்டனம் தெரிவித்து ஒரேகான் நகரில் டிரம்ப் ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்குள்ள ஜனநாயக கட்சி அலுவலகத்தின் முன் போராட்டத்தில் ஈடுபட்ட அவர்கள், அலுவலகத்தை அடித்து நொறுக்கினர்.  உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Vaijayanthi S
  First published: