இஸ்ரேலில் நடைபெற்ற மிஸ் யுனிவர்ஸ் பட்டத்துக்கான போட்டியில் இந்தியாவின் ஹர்னாஸ் சந்து (Harnaaz Sandhu)மிஸ் யுனிவர்ஸாக தேர்ந்தெடுக்கப்பட்டார். 21 ஆண்டுகளுக்கு பின்னர் இப்பட்டத்தை இந்தியர் ஒருவர் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இஸ்ரேலின் எய்லட் நகரில் உள்ள யுனிவர்ஸ் டோமில் 2021ம் ஆண்டுக்கான மிஸ் யுனிவர்ஸ் போட்டி நடைபெற்றது. இதில், 80 நாடுகளைச் சேர்ந்த 80 பேர் கலந்துகொண்டனர். இன்று நடைபெற்ற இறுதிச் சுற்றில், இந்தியாவின் ஹர்னாஸ் சந்து மிஸ் யுனிவர்ஸ் பட்டத்தை வென்று சாதனை படைத்தார். அவருக்கு 2020ம் ஆண்டு மின் யுனிவர்ஸ் பட்டத்தை வென்ற மெக்சிகோவின் ஆண்ட்ரியா மெசா (Andrea Meza ) மகுடத்தை சூடினார்.
மிஸ் பராகுவே நதியா ஃபெரீரா இரண்டாவது இடத்தையும் மிஸ் தென் ஆப்ரிக்கா லலேலா மஸ்வானே மூன்றாவது இடத்தையும் பிடித்தனர். 21 ஆண்டுகளுக்கு பின்னர் இந்தியர் ஒருவர் மிஸ் யுனிவர்ஸ் பட்டத்தை வென்றுள்ளார். இதற்கு முன்பாக கடந்த 2000 ஆண்டில் லாரா தத்தா மிஸ் யுனிவர்ஸ் பட்டத்தை வென்றுள்ளார்.
The new Miss Universe is...India!!!! #MISSUNIVERSE pic.twitter.com/DTiOKzTHl4
— Miss Universe (@MissUniverse) December 13, 2021
21 வயதான ஹர்னாஸ் சந்து சண்டிகார்க் மாநிலத்தை சேர்ந்தவர். 2017-ம் ஆண்டு மிஸ் சண்டிகராக பட்டம் வென்றவர். Yaara Diyan Poo Baran, Bai Ji Kuttange போன்ற திரைப்படங்களில் ஹர்னாஸ் சந்து நடித்துள்ளார். பிரியங்கா சோப்ராவை தனது ரோல் மாடலாக கொண்ட அவர், பெண்கள் உரிமைக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வருபவர். ஓய்வு நேரத்தை யோகா, நடனம், சமையல், குதிரை சவாரி மற்றும் செஸ் விளையாட்டு ஆகியவற்றுக்கு செலவிடுகிறார்.
இதையும் படிங்க: கொரோனா அச்சுறுத்தலுக்கு இடையே கிளப்பில் ஆட்டம்: மன்னிப்புக் கோரிய பிரதமர்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: India, Miss Universe