ஹோம் /நியூஸ் /உலகம் /

இங்கிலாந்து மக்கள் தொகையில் ஆதிக்கம் செலுத்தும் இந்தியர்கள்... கணக்கெடுப்பில் தகவல்

இங்கிலாந்து மக்கள் தொகையில் ஆதிக்கம் செலுத்தும் இந்தியர்கள்... கணக்கெடுப்பில் தகவல்

மக்கள் தொகை

மக்கள் தொகை

லண்டன் நகரில் வசிக்கும் 10ல் 4 பேர் வெளிநாட்டில் பிறந்தவர்களாக உள்ளனர். 

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • inter, Indiaenglandengland

  ஐக்கிய ராஜ்யத்துக்கு உட்பட்ட  இங்கிலாந்து, வேல்ஸ் ஆகிய பகுதிகளில் வசிப்பவர்களில் இந்தியர்களே அதிகம் என்பது மக்கள் தொகை கணக்கெடுப்பு மூலம் தெரியவந்துள்ளது.

  கடந்த ஆண்டு இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் வசிக்கும் ஆறில் ஒருவர் நாட்டிற்கு வெளியே பிறந்தவர்கள்  என்றும்  2021 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பு தரவுகளின் அடிப்படையில் சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி, அங்கு இந்தியர்கள் 1.5 சதவீத குடியிருப்பாளர்களாக உள்ளனர் என்பதும் தெரியவந்துள்ளது.

  இது தொடர்பாக பிரிட்டன் தேசிய புள்ளியியல் அலுவலகம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், "2011ம் ஆண்டில் இங்கிலாந்து மற்றும் வேல்சில் வசித்த வெளிநாட்டவர்களின் எண்ணிக்கை 75 லட்சமாக இருந்த நிலையில் 2021ம் ஆண்டில் அது 25 லட்சம் அதிகரித்து, 1 கோடியாக உள்ளது. இதில் அதிகபட்சமாக இந்தியர்கள் 9 லட்சத்து 20 ஆயிரம் பேர் உள்ளனர். அவர்களுக்கு அடுத்தபடியாக போலந்து நாட்டினர் 7 லட்சத்து 43 ஆயிரம் பேரும், பாகிஸ்தானியர்கள் 6 லட்சத்து 24 ஆயிரம் பேரும் உள்ளனர்" என கூறப்பட்டுள்ளது.

  இதையும் படிங்க: கிளியோபாட்ராவின் கல்லறைக்கான பாதையா? 2000 ஆண்டுகளுக்கு முந்தைய சுரங்கப்பாதை எகிப்தில் கண்டுபிடிப்பு!

  கடந்த 2011ம் ஆண்டில் இந்த எண்ணிக்கை என்பது இந்தியர்கள் - 6, 94,000, போலாந்து நாட்டினர் - 579,000 மற்றும் பாகிஸ்தானியர்கள் -482,000 என்ற எண்ணிக்கையில் உள்ளது. தற்போது இந்தியர்கள், போலாந்து நாட்டினர் மற்றும் பாகிஸ்தானியர்கள் ஆகியோரே இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் மக்கள் தொகையில் கணிசமாக உள்ளனர்.

  இதேபோல் லண்டன் நகரில் வசிக்கும் 10ல் 4 பேர் வெளிநாட்டில் பிறந்தவர்களாக உள்ளனர். 5ல் ஒருவருக்கு மேல் பிரிட்டன் பாஸ்போர்ட் இல்லாதவராக உள்ளனர்.

  Published by:Murugesh M
  First published:

  Tags: Britain, England, Population