அமெரிக்க திரையரங்குகளில் ஒளிபரப்பப்பட்ட இந்தியத் தேர்தல்..!

1,000 ரூபாய் மதிப்புள்ள டிக்கெட்டுகளை சுமார் 150 பேர் வாங்கி ஒரு திரையரங்கில் பார்த்துள்ளனர்.

Web Desk | news18
Updated: May 25, 2019, 6:44 AM IST
அமெரிக்க திரையரங்குகளில் ஒளிபரப்பப்பட்ட இந்தியத் தேர்தல்..!
மாதிரிப்படம்
Web Desk | news18
Updated: May 25, 2019, 6:44 AM IST
அமெரிக்காவில் உள்ள திரையரங்குகளில் அங்கு வாழும் இந்திய மக்களுக்காக இந்திய மக்களவைத் தேர்தல் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டிருக்கிறது.

உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடாகக் கருதப்படும் இந்தியாவில் நேற்று மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகின. அமெரிக்காவில் வாழும் இந்தியர்கள் இந்தியத் தேர்தல் முடிவுகள் குறித்து அறிந்துகொள்ள விரும்பியுள்ளனர்.

இதற்காக அமெரிக்காவின் மினியாபோலிஸ், மினசோட்டா போன்ற அமெரிக்கவாழ் இந்தியர்கள் வாழும் பகுதிகளில் உள்ள திரையரங்குகளில் இந்திய மக்களவைத் தேர்தல் முடிவுகள் நேரடியாக ஒளிபரப்பு செய்துள்ளனர்.


இந்திய நேரப்படி காலை 8 மணிக்கு அதாவது அமெரிக்க நேரப்படி இரவு 9.30 மணிக்கு இந்தத் தேர்தல் முடிவுகள் நேரடி ஒளிபரப்பு தொடங்கி இருக்கிறது. ஐடி நிறுவன ஊழியரும் மோடியின் ஆதரவளாருமான ரமேஷ் நூனே என்பவர் இதற்கான ஏற்பாடுகளைச் செய்திருக்கிறார்.

1,000 ரூபாய் மதிப்புள்ள டிக்கெட்டுகளை சுமார் 150 பேர் வாங்கி ஒரு திரையரங்கில் பார்த்துள்ளனர். மேலும், டெக்சாஸ், ஃப்ளோரிடா, வாஷிங்டன், கலிஃபோர்னியா என அமெரிக்காவின் பல முக்கிய நகரங்களிலும் பாஜக ஆதரவாளர்கள் சார்பில் தேர்தல் முடிவுகள் குறித்த நேரலை காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

மேலும் பார்க்க: டிரம்ப் உள்ளிட்ட உலக நாடுகளின் தலைவர்கள் மோடிக்கு வாழ்த்து!
First published: May 25, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...