நல்ல உடல்நலத்துடன் காப்பாற்றுங்கள்..! ஜப்பான் கப்பலில் தவிக்கும் இந்தியர்கள்

நல்ல உடல்நலத்துடன் காப்பாற்றுங்கள்..! ஜப்பான் கப்பலில் தவிக்கும் இந்தியர்கள்
ஜப்பான் கப்பலில் தவிக்கும் இந்தியர்கள்
  • Share this:
கொரோனா வைரஸ் பரவக்கூடிய அச்சம் காரணமாக ஜப்பான் துறைமுகத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருக்கும் டைமண்ட் ப்ரின்செஸ் கப்பலில் இருக்கும் இந்தியர்கள் இந்திய அரசிடம் தங்களைக் காப்பாற்றுமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஜப்பான் நாட்டுக்கு, ஹாங்காங்கிலிருந்து 3,700 பயணிகளுடன் வந்தடைந்த டைமண்ட் ப்ரின்செஸ் என்ற சொகுசுக் கப்பல் கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக யோகோஹாமா துறைமுகத்தில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. கப்பலில் பயணித்த 137 பேருக்கு கொரோனா தாக்கம் இருப்பதும் கண்டறியப்பட்ட நிலையில், 160 இந்தியர்கள் கப்பலில் இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்தியர்களுக்கு பாதிப்பு இருப்பதாக இதுவரை கண்டறியப்படவில்லை.

எட்டு இந்திய பயணிகள், கப்பலில் பணிபுரிவர்கள் என 160 இந்தியர்கள் கப்பலில் உள்ள நிலையில், டைமண்ட் ப்ரின்செஸ் கப்பலில் இருக்கும் பயணி ஒருவர் பிரதமர் மோடிக்கும், ஐ.நா சபைக்கும் ட்விட்டரில் காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார். ”மிகுந்த பயத்தில் இருக்கிறோம். 5 நாட்களாக எங்களைத் தனிமைப்படுத்தியிருக்கிறார்கள். கப்பலில் 66 பேருக்கு மேல் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிகாரப்பூர்வமாக எத்தனை நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என சரியாகத் தெரியவில்லை. எங்களை நல்ல உடல் நலத்துடன் மீண்டும் எங்கள் வீட்டுக்கு அனுப்பி வையுங்கள். ஐ.நா சபையும், பிரதமர் மோடியும் விரைவாக உதவுங்கள்” என வேண்டுகோள் விடுத்துள்ளார்.Also See...
First published: February 11, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading