Home /News /international /

Sudan factory fire : சூடான் தொழிற்சாலையில் நிகழ்ந்த தீ விபத்தில் 23 பேர் உயிரிழப்பு...!

Sudan factory fire : சூடான் தொழிற்சாலையில் நிகழ்ந்த தீ விபத்தில் 23 பேர் உயிரிழப்பு...!

மாதிரி படம்

மாதிரி படம்

  • News18
  • Last Updated :
    சூடான் நாட்டில் செராமிக் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 23 பேர் உயிரிழந்தனர்.

    தலைநகரான கார்த்தோமில் அமைந்துள்ள இந்த தொழிற்சாலையில் எரிபொருள் நிரப்பப்பட்ட டேங்கர் லாரி ஒன்று திடீரென்று தீப்பிடித்து வெடித்துச் சிதறியது.

    இந்த தீ பரவியதை அடுத்து தொழிற்சாலையும் பற்றி எரியத் தொடங்கியது. இந்த தீவிபத்தில் 23 பேர் உயிரிழந்த நிலையில், படுகாயமடைந்த 130 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    ஆபத்தான நிலையில் பலர் சிகிச்சை பெற்று வருவதால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. இந்த விபத்துக்கான காரணங்கள் குறித்தும், தொழிற்சாலையில் பாதுகாப்பு அம்சங்கள் முறையாக பின்பற்றப்பட்டிருக்கிறதா என்பது குறித்தும் விசாரணை நடத்த அரசு உத்தரவிட்டிருக்கிறது.

    Also see...
    Published by:Vinothini Aandisamy
    First published:

    அடுத்த செய்தி