• HOME
  • »
  • NEWS
  • »
  • international
  • »
  • அமெரிக்க துணை அதிபராக பதவியேற்கும் கமலா ஹாரிஸ் - கொண்டாடும் தமிழக மக்கள்!

அமெரிக்க துணை அதிபராக பதவியேற்கும் கமலா ஹாரிஸ் - கொண்டாடும் தமிழக மக்கள்!

அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜோ பைடன் (President-elect Joe Biden), மீண்டும் அதிபராக தேர்ந்தெடுக்கப்படுவாரா அல்லது ஓய்வு பெறுவாரா என்ற கேள்விகளை மக்கள் தவிர்த்துவிட்டார். 

  • News18
  • Last Updated :
  • Share this:
நெல் வயல்களால் சூழப்பட்ட ஒரு சிறிய, பசுமையான தமிழக கிராமமான துளசேந்திரபுரத்தை (Thulasendrapuram) சேர்ந்த மக்கள், கமலா ஹாரிஸ் (Kamala Harris) அமெரிக்கத் துணை அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றிருப்பதை குறித்து தாங்கள் பெருமையடைவதாக தெரிவித்துள்ளனர். அமெரிக்காவின் முதல் பெண் துணை அதிபர், கருப்பின பெண் துணை அதிபர், மற்றும் தெற்காசிய வம்சாவளியைச் சேர்ந்த முதல் நபர் (South Asian descent), என்ற வரலாற்றை கமலா ஹாரிஸ் உருவாக்கி உள்ளார். 

தெற்கு கடலோர நகரமான சென்னையில் இருந்து சுமார் 350 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அவரது தாய்வழி தாத்தாவின் சொந்த ஊரான துளசேந்திரபுரத்தில், கமலா ஹாரிஸ் பதவியேற்பு தினத்தை மக்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாட்டி வருகின்றனர். "ஒரு இந்தியர் அமெரிக்காவின் துணை அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம்" என்று அனுகம்பா மாதவசிம்மன் (Anukampa Madhavasimhan) என்ற ஆசிரியர் பெருமிதம் கொள்கிறார். 

கமலாவின் தாத்தா பல தசாப்தங்களுக்கு முன்னர் தமிழ்நாட்டின் தலைநகரான சென்னைக்கு குடிபெயர்ந்தார். கமலாவின் (Kamala Harris) மறைந்த தாயும் இந்தியாவில் பிறந்தவர் தான், இவர் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் படிப்பதற்காக USக்குச் சென்றார். படிக்கும் போது அவர் ஒரு ஜமைக்கா மனிதரை திருமணம் செய்துகொண்டார். பின்னர் தங்களுக்கு பிறந்த மகளுக்கு கமலா என்று பெயரிட்டனர், இது "தாமரை மலர்" என்ற சமஸ்கிருத வார்த்தையாகும். 

கடந்த நவம்பரில் நடந்த அமெரிக்க தேர்தலுக்கு முன்னதாக, துளசேந்திரபுரத்தில் உள்ள கிராம மக்கள் ஒன்றிணைந்து பிரதான இந்து கோவிலில் ஒரு விழாவை நடத்தி ஹாரிஸுக்கு நல்வாழ்த்துக்களை தெரிவித்தனர். தற்போது துணை அதிபராக கமலா ஹாரிஸ் தேர்வாகி உள்ளதை துளசேந்திரபுரம் கிராம மக்கள் கொண்டாடி வருகின்றனர். கமலா ஹாரிஸுக்கு வாழ்த்து தெரிவித்து கோலங்களை வீடுகள் முன் பெண்கள் போட்டிருந்தனர். அதில் "வணக்கம் அமெரிக்கா" என ஆங்கிலத்தில் எழுதி இருந்தனர். எங்களது கிராமத்தின் பெருமைக்குரியவர் எனவும் கோலத்தில் வாழ்த்து தெரிவித்திருந்தனர் துளசேந்திரபுரம் மக்கள்.

தேர்தலில் கமலா வெற்றிபெற்ற பிறகு, அவர்கள் பட்டாசுகளை வெடித்தும், இனிப்பு மற்றும் பூக்களை பரிமாறி தங்களின் மகிழ்ச்சியான மன நிலையை அனைவரிடமும் பகிர்ந்துகொண்டனர். நவம்பர் மாத கொண்டாட்டங்களின் போது கிராமமெங்கும் வைக்கப்பட்ட கமலா ஹாரிஸின் பேனர்கள் இன்னும் கிராமத்தின் சுவர்களை அலங்கரிக்கின்றன, மேலும் அவர் 2024ல் அதிபர் பதவிக்கு முன்னேறுவர் என்று பலரும் நம்புகிறார்கள். 

இந்தியாவை பொருத்தவரை, தற்போது கமலா ஹாரிஸின் இரு நெருங்கிய குடும்ப உறவுகள் மட்டுமே உள்ளனர். ஒன்று டெல்லியில் வாழும் அவரது தாய்வழி மாமா கோ. கோபாலன், மற்றொருவர் சென்னையில் வாழும் தாய்வழி சித்தி சரளா கோபாலன்.

Also read... டிரம்புக்கு எதிரான தடையை மேலும் ஒரு வாரம் நீட்டிப்பதாக யூடியூப் நிறுவனம் அறிவிப்பு!

அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜோ பைடன் (President-elect Joe Biden), மீண்டும் அதிபராக தேர்ந்தெடுக்கப்படுவாரா அல்லது ஓய்வு பெறுவாரா என்ற கேள்விகளை மக்கள் தவிர்த்துவிட்டார். 

பதவியேற்புக்கு முன்னதாக, சிறப்பு பிரார்த்தனைகள் உள்ளூர் கோவிலில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இதன் போது சிவபெருமானின் ஒரு வடிவமான இந்து தெய்வம் அய்யானரின் சிலை பாலில் கழுவப்பட்டு பூசாரிகளால் அலங்கரிக்கப்படும். நேற்று (ஜனவரி 19 அன்று), சைவ சமயத்தை ஊக்குவிக்கும் ஒரு அமைப்பு, கமலா ஹாரிஸின் வெற்றியைக் கொண்டாடுவதற்காக கிராமத்தில் இருக்கும்  குழந்தைகளுக்கு உணவுப் பார்சல்களை பரிசாக அளித்தது.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: