வெள்ளை மாளிகை முற்றுகை போராட்டத்தில் இந்திய தேசிய கொடியை ஏந்தியது யார்? வைரல் வீடியோ!
உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய இப்போராட்டத்தின் போது ஒருவர் இந்திய நாட்டின் கொடியை கையில் ஏந்தியிருப்பது போன்ற வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

- News18
- Last Updated: January 7, 2021, 3:59 PM IST
சமீபத்தில் நடைபெற்று முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் போட்டியிட்ட டொனால்ட் ட்ரம்ப், ஜனநாயக கட்சி வேட்பாளரான ஜோ பைடனிடம் தோல்வியை தழுவினார். நேற்று நடைபெற்ற எலக்டோரல் காலேஜ் வாக்குப்பதிவின் முடிவிலும் ஜோ பைடனின் வெற்றி அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது.
இம்முடிவின் மூலம் வரும் ஜனவரி 20ம் தேதியன்று புதிய அதிபராக ஜோ பைடன் பதவியேற்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போதைய அதிபர் டொனால்ட் ட்ரம்பின் ஆதரவாளர்கள் தோல்வியை ஒப்புக்கொள்ளாமல் தலைநகர் வாஷிங்டனில்
உள்ள வெள்ளை மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். 
ஆயிரக்கணக்கானவர்கள் திரண்டு வந்ததால் போலீசார் கலவரக்காரர்களை கலைந்து செல்ல அறிவுறுத்தினர். இருப்பினும் நிலைமை மோசமானதால் கலவரக்காரர்கள் மீது
போலீசார் துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டனர். இதில் ஒரு பெண் உட்பட 4 பேர் உயிரிழந்ததாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. போராட்டத்தையடுத்து பதற்றத்தை தணிக்கும் வகையில் வாஷிங்டன் மேயர் 15 நாட்களுக்கு அவசர நிலையை பிரகடனம் செய்து அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
உலக வல்லரசு சக்தியாக திகழும் அமெரிக்காவின் அதிபர் மாளிகை முற்றுகையிடப்பட்ட சம்பவம் மற்றும் துப்பாக்கிச்சூடு உலக நாடுகளை அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது.
உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய இப்போராட்டத்தின் போது ஒருவர் இந்திய நாட்டின் கொடியை கையில் ஏந்தியிருப்பது போன்ற வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
எதற்காக இது போன்ற போராட்டத்தில் இந்திய கொடியை ஏந்த வேண்டும்? இந்திய கொடியை ஏந்தியவர்கள் யாராக இருந்தாலும் இதற்காக வெட்கப்பட வேண்டும். வேறொரு நாட்டில் நடக்கும் இது போன்ற கிரிமினல் நடவடிக்கையில் மூவர்ணக் கொடியை பயன்படுத்தலாமா? என்பது போன்ற கேள்விகளுடன் ட்விட்டரில் இந்த வீடியோவை பகிர்ந்து வருகின்றனர்.
உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்

Why is there an Indian flag there??? This is one fight we definitely don’t need to participate in... pic.twitter.com/1dP2KtgHvf
— Varun Gandhi (@varungandhi80) January 7, 2021